சென்னை:
“பஸ்டே’’ கொண்டாடிய கல்லூரி மாணவர்களால் அண்ணா சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னையில் “பஸ்டே’’ கொண்டாட போலீஸ் தடை விதித்துள்ளது. இதை மீறி நியூ காலேஜ் மாணவர்கள் நேற்று “பஸ் டே“ கொண்டாடினர்.
அயனாவரத்தில் இருந்து பெசன்ட் நகர் செல்லும் 23சி பஸ் அண்ணாசாலை வந்தபோது அதை நிறுத்தி 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஏறினர். இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் இறங்கி விட்டனர்.
அதன்பின் மாணவர்கள் பாட்டுப் பாடி ஆட்டம் போட்டபடி ஊர்வலமாக சென்றனர். தகவல் அறிந்து அண்ணாசாலை போலீசார் அங்கு வந்தனர். பொதுமக்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் செல்லுங்கள் என்று கூறினர். டிவிஎஸ் பஸ் நிறுத்தம் வந்ததும் திடீரென மாணவர்கள் பஸ்சின் கூரை மீது ஏற முயன்றனர். இதை போலீசார் தடுத்து அவர்களை எச்சரித்தனர்.
அதன்பின் மாநகர போக்குவரத்து கழகத்தில் இருந்து வேறொரு பஸ் வரவழைக்கப்பட்டது. அதில் பாதிபேர் ஏறினர். ஆனந்த் தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகே 2 பஸ்சையும் நிறுத்தி ரோட்டில் பட்டாசு வெடித்தனர். குத்தாட்டம் போட்டனர்.
இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. மாணவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் கூறினர்.
ஆத்திரமடைந்த மாணவர்கள் 2வதாக வரவழைக்கப்பட்ட பஸ்சின் இருக்கைகளை கிழித்தனர். டியூப்லைட்களை அடித்து நொறுக்கினர். பிறகு கூச்சல் போட்டபடி ஓட்டம் பிடித்தனர்.

0 comments :
Post a Comment