background img

புதிய வரவு

உலகக் கோப்பை கிரிக்கெட்-அதிகாரப்பூர்வ கார் பார்ட்னர் ஹூண்டாய்

மும்பை: கடும் போட்டிகளுக்கு இடையே,உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.)அதிகாரப்பூர்வ கார் பார்ட்னர் அந்தஸ்தை ஹூண்டாய் நிறுவனம் பெற்றுள்ளது.

ஐ.சி.சி.,உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வரும் 19ந்தேதி துவங்க உள்ளது.இந்தியா, வங்கதேசம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இந்த மெகா திருவிழாவை இணைந்து நடத்துகின்றன.

உலககோப்பை கிரிக்கெட் போட்டிகளை இணைந்து நடத்துவதற்கான ஒத்துழைப்பு மற்றும் சேவையை வழங்கும் வகையில்,பல்வேறு பிரிவுகளின் கீழ் பல முன்னணி நிறுவனங்களை ஐ.சி.சி அதிகாரப்பூர்வமாக நியமித்துள்ளது.

இதில்,ஐ.சி.சி.யின் கார் பார்ட்னர் அந்தஸ்தை ஹூண்டாய் நிறுவனம் பெற்றுள்ளது.கார் பார்ட்னர் அந்தஸ்தை பெறுவதற்கு மாருதி சுஸுகி உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் கடுமையாக போட்டியிட்டன.இறுதியில் ஹூண்டாய் நிறுவனத்திற்கு வாய்ப்பு கிட்டியுள்ளது.

இதன்மூலம்,இந்த உலககோப்பை கிரிக்கெட் போட்டி முதல் அடுத்த 4 ஆண்டுகளுக்கு ஐ.சி.சி.யின் அதிகாரப்பூர்வ கார் பார்ட்னராக இருப்பதற்கு ஹூண்டாய் நிறுவனம் ஐ.சி.சி.யுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.மேலும்,உலககோப்பை போட்டியில் ,வீரர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டவர்களை போட்டிகளுக்கு அழைத்து செல்வதற்கு ஹூண்டாய் கார்கள் பயன்படுத்தப்படும்.

இதுகுறித்து ஹூண்டாய் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி(சி.இ.ஒ.,) கூறியதாவது:

"ஐ.சி.சி.யின் கார் பார்ட்னர் அந்தஸ்தை பெற்றது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது.இந்த மெகா திருவிழாவில் நிர்வாகிகள்,வீரர்கள்,விருந்தினர்கள் உள்ளிட்டவர்களை அழைத்து செல்வதற்கு ஹூண்டாய் கார்கள் பயன்படுத்தப்படும்.இதற்காக ஐ10,சாண்டா எஸ்யூவீ,வெர்ணா,சொனாட்டா உள்ளிட்ட கார்கள் பயன்படுத்தப்படும்.

இதுதவிர,ஒப்பந்தத்தின்படி,வரும் 2015ம் ஆண்டு வரை ஐ.சி.சி.யின் அதிகாரப்பூர்வ கார் பார்ட்னராக ஹூண்டாய் இருக்கும்.மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்,ட்வென்ட்டி20 போட்டிகளிலும் ஐ.சி.சி.கார் பார்ட்னராக ஹூண்டாய் செயல்படும்,"என்றார்.

பிபா உலககோப்பை கால்பந்து போட்டியின் அதிகாரப்பூர்வ கார் பார்ட்னராகவும்,ஐ.சி.சி.விருது வழங்கும் விழாவிற்கான பெயர் காப்புரிமை பெற்ற நிறுவனமாகவும் ஹூண்டாய் நிறுவனம் திகழ்கிறது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts