background img

புதிய வரவு

பசுமை அங்காடியில் காய்கறி விற்பனை அமோக‌ம்

ஈரோடு மாவட்டத்தில் பசுமை அங்காடிகளில் காய்கறி விற்பனை மும்பரமாக நடக்கிறது.

தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவு காய்கறிகள் விலை விண்ணை தொடும் அளவு உயர்ந்தது. ஒரு கிலோ பெரியவெங்காயம் ரூ.100 க்கு விற்பனையானது. அனைத்து தரப்பு மக்களையும் முகம் சுளிக்கசெய்தது. மேலும் சிறியவெங்காயம், தக்காளி என அனைத்து காய்கறிகள் விலைகளும் அதிகரித்தது.

இதனால் அரசுக்கு சிக்கல் ஏற்படும் நிலைக்கு தள்ளப்பட்டது. இதனால் அரசு அதிரடி நடவடிக்கையாக கூட்டுறவு சங்கங்கள் மூலம் பசுமை அங்காடி என்ற பெயரில் காய்கறி கடை துவங்கியது. காய்கறி உற்பத்தியாளர்களிடம் நேரடியாக அரசு கொள்முதல் செய்து இதை பொதுமக்களுக்கு லாபநோக்கின்றி விற்பனை செய்ய தொடங்கியுள்ளது.

மார்கெட்டில் ஒரு கிலோ பெரியவெங்காயம் ரூ.60 வரை விற்பனையாகும் நிலையில் பசுமை அங்காடியில் ரூ.27 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல் சின்னவெங்காயம் கிலோ ஒன்று ரூ.45 க்கு விற்பனையாகிறது. ஆனால் மார்கெட்டில் ஒரு கிலோ சின்னவெங்காயம் ரூ.65 க்கு விற்கப்படுகிறது.

இதேபோல் தக்காளி பழம் பசுமை அங்காடியில் ஒரு கிலோ ரூ. 15 க்கு விற்கப்படுகிறது. ஆனால் மார்கெட்டில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.35 ஆகும். இதேபோல் அனைத்து காய்கறிகளும் மார்கெட்டை விட பசுமை அங்காடியில் 50 சதவீதத்திற்கு கீழாக கிடைப்பதால் பொதுமக்கள் பசுமை அங்காடியை நோக்கி செல்ல துவங்கியுள்ளனர். இதனை சமாளிக்க கடந்த இரண்டு நாட்களில் தினசரி மார்கெட்டிலும் காய்கறிகளின் விலை குறைந்து வருவது குறிப்பிடதக்கது.

இது குறித்து தினசரி மார்கெட் வியாபாரி ஒருவர் கூறுகை‌யி‌ல், அரசு காய்கறி உற்பத்தியாளர்களிடம் இருந்து மொத்தமாக கொள்முதல் செய்து லாபம் இல்லாமல் விற்பனை செய்வதால் குறைந்த விலைக்கு கொடுக்க முடிகிறது.

ஆனால் நாங்கள் குறைந்த லாபம் இல்லாமல் விற்பனை செய்வது சாத்தியமில்லாத செயலாகும். இருந்த போதிலும் எங்களிடம் அனைத்து ரக காய்கறிகளும் தேவையான அளவு கிடைக்கும். ஆனால் பசுமை அங்காடியில் அப்படி கிடைக்குமா என்பது தெரியவில்லை என்றார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts