background img

புதிய வரவு

பிரைடு ரைஸ்

தேவையான பொருட்கள்

பாசுமதி அரிசி - 1 கப்
வெண்ணை/ எண்ணெய் - 8 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 2
முட்டைக்கோஸ் - 50 கிராம்
கேரட் - 2
குடமிளகாய் (பச்சை, மஞ்சள், சிவப்பு) - தலா 1
வெள்ளை மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
சைவ அஜினமோட்டோ - 1 சிட்டிகை
சோயா சாஸ் - 1/2 டீஸ்பூன்
சில்லி வினிகர் - 1/2 டீஸ்பூன்
சில்லி சாஸ் - 1/2 டீஸ்பூன்
நறுக்கிய வெங்காயத்தாள் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை

அடிகனமான வாணலியில் 4 டேபிள் ஸ்பூன் வெண்ணை அல்லது எண்ணெய்யை ஊற்றி லேசான தீயில் பாசுமதி அரிசியை சற்று வாசனை வர வறுக்கவும்.வறுத்த அரிசியை குக்கரில் இட்டு 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி 2 விசில் விட்டதும் உதிரி உதிரியாக சமைத்து தனியே எடுத்து வைக்கவும்.அனைத்துக் காய்களையும் நீட்டமாக,மிக மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.அடிகனமான பெரிய வாணலியில் வெண்ணை அல்லது எண்ணெய் ஊற்றி இஞ்சி-பூண்டு விழுது,வெங்காயம் சேர்த்து சிறிது வதக்கவும்.
பிறகு அரிந்த காய்கள்,வெள்ளை மிளகுத்தூள்,உப்பு சேர்த்து வாணலியில் போட்டு வாணலியை கைகளால் குலுக்கியபடி காய்களை அரை வேக்காடாக வதக்கவும். பின்பு வடித்த பாசுமதி அரிசி சாதம்,சோயா சாஸ்,சில்லி வினிகர்,சில்லி சாஸ்,சைவ அஜினமோட்டோ ஆகியவற்றைச் சேர்த்து அரிசி சாதம் உடையாமல் நன்கு கலந்து சிறிது வதக்கி அடுப்பை அணைக்கவும்.

* பொடியாக அரிந்த வெங்காயத்தாள் தூவி அலங்கரித்து பரிமாறலாம்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts