டைரக்டர் வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித் - த்ரிஷா நடிக்கும் மங்காத்தா படம் இறுதிகட்டத்தை எட்டிக் கொண்டிருக்கிறது. படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் மதுரையில் படமாக்கப்பட உள்ளன. இதற்காக மங்காத்தா டீம் விரைவில் மதுரை செல்கிறது. அஜித்தின் 50வது படமான மங்காத்தா, கிரிக்கெட் போட்டிகளின்போது நடக்கும் பெட்டிங் விவகாரங்களை மையப்படுத்தி உருவாகி வரும் படம். வெளிநாடுகளில் மற்றும் சென்னையில் சூட்டிங்கை முடித்து தற்போது மும்பையில் முகாமிட்டிருக்கும் அஜித், த்ரிஷா, சினேகா, லட்சுமிராய் உள்ளிட்ட மங்காத்தா குழுவினர், விரைவில் மதுரை செல்கிறார்கள். படத்தின் கதைக்களம் வெளிநாடுகள், சென்னை, மும்பை என நகர்ந்து கொண்டிருந்தாலும் க்ளைமாக்ஸை மதுரையில் படமாக்க அப்படத்தின் தயாரிப்பாளர் க்ளவுட்நைன் தயாநிதி அழகிரி நினைத்தாராம். இதனால் க்ளைமாக்ஸ் மதுரையில் படமாக்கப்படுகிறது. அஜித் பிறந்த தினமான மே 1ம்தேதி மங்காத்தாவை திரையிடும் திட்டத்துடன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
0 comments :
Post a Comment