background img

புதிய வரவு

இஞ்சியின் பயன்கள்

சித்த மருத்துவர் பத்மபிரியா, இஞ்சியில் என்ன மருத்துவ குணங்கள் இருக்கின்றன- எந்த அளவில்- எந்த நேரத்தில்- எப்படி சாப்பிட்டால் இளமையை தக்கவைக்க முடியும்' என்று விளக்குகிறார். அவருடைய பதில்:


இஞ்சி: சக்தி நிறைந்த இஞ்சியின் தோல் பகுதி மட்டும் நஞ்சு போன்றது.
அதனால் தோலை நீக்கிவிட்டுத்தான் இஞ்சியை பயன்படுத்த வேண்டும். பசியின்மை, வாந்தி, குமட்டல், அஜீரணம், வயிற்றுவலி போன்றவைகளை போக்கும் சக்தி இஞ்சிக்கு உண்டு.

இது `ஆன்டி ஆக்சிடென்ட்' ஆக செயல்பட்டு ஆயுளை அதிகரிக்கவும் செய்யும். பாக்டீரியா, வைரஸ் கிருமிகளை அழிக்கும் ஆற்றலும் இஞ்சியில் இருக்கிறது.

இஞ்சி ஈரப்பதம் மிக்கது என்பதால் ஜீரண சுரப்பிகளின் செயலை அதிகரித்து, ஜீரண நீரை நன்றாக சுரக்கச்செய்யும். இதனால் ஜீரணம் எளிதாக்கப்படும். இதில் சுண்ணாம்பு சத்து அதிகம். இஞ்சியை அளவுக்கு அதிகமாக உட்கொள்ளக்கூடாது. தினமும் 5 மி.லி. அளவு சாறை, தேனுடன் கலந்து பருகவேண்டும்.

அல்லது தோல் நீக்கிய இஞ்சியை சிறு துண்டுகளாக்கி தேனுடன் கலந்து தேன் ஊறலாக சாப்பிட வேண்டும். காலையில் இதை சாப்பிட்டால் நாள் முழுக்க ஜீரணம் நன்றாக இருக்கும். ரத்தத்தின் அடர்த்தியை குறைக்கக்கூடிய ஆஸ்பிரின் போன்ற மாத்திரை, மருந்துகளை சாப்பிடக்கூடியவர்களும், உடல் உஷ்ணத்தன்மை கொண்டவர்களும் குறைந்த அளவிலே இஞ்சி சாறு பருகவேண்டும்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts