
ஒவ்வொரு விலங்கினம், பறவையிடமும் ஒவ்வொரு தனித்திறமை உண்டு. அதன் ஆற்றலை பெறவே மறைமுகமாக இப்பெயரை சித்தர்கள் சூட்டியுள்ளனர்.
அது போல் இவ்வாசனம் செய்வதன் மூலம் சில சூட்சுமங்கள் ரகசியதாக விளக்கப்படுகின்றன. நீங்கள் இவ்வாசனத்தை பழகி வரும் போது உடலின் உணர்வுகளை நரம்பு துடிப்புகளால் அறிந்து கொள்வீர்கள்.
செய்முறை:
பத்மாசனமிட்டு முன்னுள்ள தொடையிடுக்கில் கீழ் மெதுவாக கை விரலை நுழைக்கவும். பின்னர் கைகளை உள்ளே விட்டு உள்ளங்கைகள் நன்றாக தரையில் ஊன்றிய படி எழவும், 20 எண்ணும் வரை இருந்து பின் அமரவும், ஓய்வெடுத்த பின் செய்யவும், 3 முதல் 5 தடவைகள் செய்யலாம்.
பலன்கள் :
கல்லீரல், மண்ணீரல், இரைப்பை நன்கு செயல்படும். இதயம் பலம் பெறும். மனம் ஒரு நிலைப்படும். முழங்கால் மூட்டு வலி, நீங்கும். உடல் பாரம் முழுவதும் கைகள் தாங்கி நிற்பதால் கைகள், புஜங்கள், தோள் பட்டைகள் அதிகமான பலம் பெறும்.
0 comments :
Post a Comment