கவர்ச்சி நடிகை சோனா பொது நிகழ்ச்சிகளுக்கு கவர்ச்சியாக உடையணிந்து வருவதை கண்டித்து இந்து மக்கள் கட்சி போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. ஆண்களுடன் வாழ முடியாது; ஆண்கள் இல்லாமலும் வாழ முடியாது என்ற வித்தியாசமான தத்துவத்தை தனது பேட்டிகளில் எல்லாம் சொல்லி வரும் சோனா பொது நிகழ்ச்சிகளில் ரொம்பவே கவர்ச்சியாகவே பங்கேற்பார். இதனை கண்டித்து இந்து மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நடிகை சோனாவின் நடவடிக்கைகள் தமிழ் பண்பாட்டுக்கு விரோதமாக உள்ளன. பொதுநிகழ்ச்சிகளுக்கு கவர்ச்சி உடையில் வருகிறார். முற்போக்குத்தனம் என நினைத்து கலாச்சாரத்துக்கு எதிரான கருத்துக்களை வெளியிடுகிறார். ஆணோடு வாழ முடியாது. ஆண் இல்லாமலும் வாழ முடியாது என்று பேசுகிறார். ஆண்களை நம்ப மாட்டேன். நண்பர்களை நம்புவேன் என்கிறார். பெண்களை சிகரெட் பிடிக்க தூண்டுகிறார். பார்ட்டிகளும் நடத்துகிறார். மேற்கத்திய கலாச்சாரத்தை திணிப்பதையே அவர் செயல்பாடுகள் காட்டுகின்றன.
எனவே சோனாவை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும். உடுமலையில் இந்து மக்கள் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் ரமணன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது. காதலர் தினம் கொண்டாடப்படுவதை எதிர்த்து வருகிற 13ம்தேதி கடற்கரை கண்ணகி சிலை அருகில் மாநில செயலாளர் குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். காதலர் தினம் என்பது நமது பண்பாட்டுக்கு விரோதமானது. அதை தடை செய்ய வேண்டும். அன்றைய தினம் சில நட்சத்திர ஓட்டல்களில் பெண்களுக்கு இலவசமாக மது வழங்கப்படும் என அறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளன. போலீசார் இதை அனுமதிக்கக்கூடாது. விதி முறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

0 comments :
Post a Comment