உலகம் முழுவதிலும் நாளை மறுநாள் (14-ந்தேதி) காதலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் காதலர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் அன்பை பரிமாறிக் கொள்ளும் வகையில் பரிசுகள் வழங்குவது வழக்கம்.
காதல் வானியில் புதிதாக சிறகடித்து பறப்பவர்கள் இந்நாளில் தான் மனங் கவர்ந்தவர்களிடம் தங்களது காதலை ரோஜாப்பூ அல்லது பூங்கொத்து கொடுத்து வெளிப்படுத்துவதுண்டு.
இதனால் சென்னை, மதுரை, திருச்சி, கோவை போன்ற நகரங்களில் ரோஜாப்பூ மற்றும் பரிசுப் பொருட்கள் விற்பனை ஜருராக நடந்து வருகிறது. நட்சத்திர ஓட்டல்களில் காதலர் தின சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தனியார் டி.வி.க் களில் காதலர்களுக்கான பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளி பரப்பப்படுகின்றன. காதலர் தினத்தன்று புதுமணத் தம்பதிகளும் பரிசு கொடுத்து வாழ்த்து தெரிவிக்கும் கலாசாரம் வந்து விட்டது. இதனால் காதலர் தினம் தற்போது பெரு நகரங்களில் திருவிழா போல் கொண்டாடப்படுகிறது.
ஆண்-பெண் மனதில் காதல் உணர்வு ஏற்படுவது எப்படி? என்பது பற்றி பிரபல செக்காலஜிஸ்ட் நிபுணர் டாக்டர் காமராஜ் கூறியதாவது:-
ஆண்-பெண் இருவரது மூளைப் பகுதியில் காதல் உணர்வை தூண்டக் கூடிய ஹார்மோன்கள் உள்ளன. இந்த ஹார்மோனின் பெயர் பினைல் எத்திலமைன். மூளையின் அடிப்பகுதியில் உள்ள ஹிபோ காம்பஸ், அமெக்தலா என்ற பகுதியில்தான் காதல் உணர்வு உண்டாகிறது.
ஒரு பெண்ணின் பேச்சில், அழகில் மயங்குவதற்கு ஆணின் மூளையில் ஏற்படும் ரசாயண மாற்றமும் ஒரு காரணம். இதனால்தான் ஒருவர் காதலில் விழுந்து விட்டால் அவருக்கு கெமிஸ்ட்ரி ஆரம்பமாயிருச்சு என்று நண்பர்கள் சொல்கிறார்கள்.
காதலர்கள் காதலை வளர்ப்பதற்கு ஒருவருக் கொருவர் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் கோபப்படக் கூடாது. ஒருவர் சொல்வதை மற்றவர் புரிந்து நடப்பது நல்லது. பொய் பேசுவதை தவிர்த்து உண்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். எந்த விஷயத்தையும் மறைக்க கூடாது.
பூங்கா, கடற்கரை போன்ற பகுதிகளுக்கு சென்று மனம் விட்டு பேச வேண்டும். எந்த விஷயத்திலும் வாக்கு வாதம் செய்ய கூடாது. இப்படி நடந்து கொண்டால் காதலில் எளிதில் வெற்றி பெறலாம் என்கிறார் டாக்டர் காமராஜ்.
காதலர் தினமான 14-ந் தேதி காதலை வெளிப்படுத்த உகந்த நேரம் எது என்பது பற்றியும், ஒவ்வொரு ராசிக்காரர்களும் எந்த கலர் ஆடையை அணிந்து காதலை வெளிப்படுத்தினால் வெற்றி பெறலாம் என்பது பற்றி பிரபல ஜோதிடர் சதீஷ்குமார் கூறியதாவது:-
14-ந்தேதி அன்று சந்திரன் மிதுனத்தில் இருப்பதால் காதல் உணர்வு மிகுந்த நாளாக அமைகிறது. இந்நாளில் காலை 11 முதல் 12 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் மிகவும் நல்ல நேரமாகும். இந்நேரத்தில் காதலை வெளிப்படுத்தினால் வெற்றி நிச்சயம். ஒவ்வொரு ராசிக்காரர்களும் அணிய வேண்டிய வண்ண ஆடைகள்.
மேஷம்- வெளிர்நிற சிவப்பு,
ரிஷபம்- வெண்மை
மிதுனம்- அடர்பச்சை
கடகம்- வெண்மை
சிம்மம்- சிவப்பு, கறுப்பு கலந்த நிறம்
கன்னி- பச்சை
துலாம்- வெண்மை
விருச்சிகம்- வெளிர்நிற சிவப்பு
தனுசு- மஞ்சள்
மகரம்- கறுப்பு
கும்பம்- கறுப்பு
மீனம்- மஞ்சள்
ஒவ்வொரு ராசியினரும் இந்த ராசி வண்ண உடைகளை அணிந்து சென்று காதலை வெளிப்படுத்தினால் காதல் வெற்றி அடைவது உறுதி என்கிறார் ஜோதிடர் சதீஷ்குமார்.
காதலர் தினத்தையொட்டி 30 லட்சம் ரோஜாக்கள் பெங்களூரில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இது தவிர மராட்டியத்தில் இருந்தும் ரோஜாக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஓசூரில் இருந்து 50 வகையான 100 கோடி ரோஜா மலர்கள் எற்றுமதி செய்யப்படுகிறது.
இந்த ரோஜாக்கள் புத்தாண்டை விட காதலர் தினத்திற்குதான் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த ஆண்டு கோகினூர் என்ற புதிய ரக ரோஜா வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறது. ஓசூர் ரோஜாக்கள் ஒரு மாதம் வரை வாடாது என்பது விசேஷம்.
காதலர் தினத்தையொட்டி 13-ந்தேதி மாலை 6 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம் இஸ்பகானி சென்டரில் சிறப்பு பேஷன் ஷோ நடக்கிறது. இதில் ஏராளமான மாடலிங் அழகிகள் கலந்து கொள்கிறார்கள். எக்ஸ்பிரஸ் அவென்யூவில் உள்ள “எவால்வ்” நிறுவனத்தால் காதலர் தின சிறப்பு சலுகையில் ஆடைகள் விற்பனை நடக்கிறது.
காதலர்களுக்கு இங்கு 25 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது போல் நட்சத்திர ஓட்டல்களில் காதலர் தின சிறப்பு உணவுகள் சலுகை விலையில் வழங்கப்படுகிறது. காதலர் தினத்திற்கு எதிர்ப்பு காதலர் தினத்திற்கு இந்து முன்னணி மாநில அமைப்பாளர் நா.முருகானந்தம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பன்னெடுங் காலமாக உயர்ந்த கலாச்சாரத்திற்கு எடுத்துக்காட்டான பூமியாகும். உண்மையான காதலுக்கு இந்து முன்னணி என்றுமே துணை நிற்கும். சாதிகளைக் கடந்த காதல் வெற்றி பெறவும் இந்து முன்னணி துணை நிற்கும். ஆனால் காதலர் தினம் என்ற பெயரில் தமிழகத்தில் நடக்கும் கலாச்சார அநாகரீகத்தை இந்து முன்னணி கடுமையாக எதிர்க்கும்.
காதலர் தினம் என்ற பெயரில் பொது இடங்களில் ஆபாசமாக நடந்து கொள்பவர்களை இந்து முன்னணி தடுத்து நிறுத்தும். மேலும் கோவில்களில் காதலர் தினக்கூத்துக்கள் நடக்க இந்து முன்னணி ஒரு போதும் அனுமதிக்காது. காதலர் தினத்தன்று இந்து முன்னணியினர் கையில் தாலியுடன் இருந்து உண்மையான காதலர்களை சேர்த்து வைப்பார்கள், பொது இடங்களில் அநாகரீகமாக நடந்து கொள்பவர்களை தட்டிக்கேட்பார்கள்.
தமிழக மக்கள் தமிழர்களின் கலாச்சார பெருமையைக் காப்பாற்ற காதலர் தினத்தை புறக்கணிக்க வேண்டுமென இந்து முன்னணி கேட்டுக் கொள்கிறது என்றார்.
காதலர் உணர்வை ஈர்க்கும் ராசிகள் ஒவ்வொரு பெண் ராசியையும் ஈர்க்கும் ஆண் ராசிகளை வரிசையாக கொடுத்துள்ளோம். ராசிப் பொருத்தம் சரியாக இருந்தால் காதல் வெற்றி அடையும். காதலை வெளிப்படுத்தும் போது அவரவர் ராசிகளை அறிந்து காதலிப்பது நல்லது.
பெண் ராசி-ஆண் ராசி
மேஷம்-சிம்மம்,விருச்சிகம்,
ரிஷபம்-கடகம், துலாம்,
மிதுனம்- கன்னி,
கடகம்- விருச்சிகம், தனுசு,
சிம்மம்- துலாம்,
கன்னி- மிதுனம், மீனம்,
துலாம்- கன்னி, மகரம்,
விருச்சிகம்-கடகம்
தனுசு- மீனம்
மகரம்- மேஷம், கும்பம்,
கும்பம்-மேஷம்
மீனம்- மகரம்
காதலர் கோவில் வேலூர் மாவட்டம் சோழிங்கரில் காதலர்கள் வழிபடுவதற்கென்றே வேலன்டைன் ரிந்தாவனா துளசி ஸ்ரீகிருஷ்ணா ஆலயம் கட்டப்படுகிறது.
ரூ.2.5 லட்சம் செலவில் கட்டப்படும் இக்கோவிலில் ஜெய்ப்பூர் மார்பிளில் கிருஷ்ணா-ராதா சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இக்கோவிலில் உள்ள கிருஷ்ணா-ராதாவுக்கு சிறப்பு பூஜை செய்தால் காதல் வெற்றி அடையும் என்று இதன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

0 comments :
Post a Comment