
இதையே தற்போது நிஜமாக்கி இருக்கிறது அமெரிக்காவை சேர்ந்த டெரபுஜியா டிரான்சிசன் நிறுவனம். இந்நிறுவனம் தயாரித்துள்ள நவீன கார் சாலையில் மணிக்கு 105 கி.மீ. வேகத்திலும், ஆகாயத்தில் 185 கி.மீ. வேகத்திலும் பறக்கும். இந்த காருக்கு விமானத்திற்கு பயன்படுத்தும் பெட்ரோல் தேவை இல்லை.
சாதாரண பெட்ரோலே போதும். இதன் விலை ரூ.90 லட்சம் ஆகும். டெரபுஜியா நிறுவனத்தை சேர்ந்த ரிச்சர்டு ஜெர்ஷ் கூறும் போது, கார் போன்ற தோற்றத்தில் இருக்கும் இந்த விமானத்தை முதலில் விமான நிலையங்களில் இருந்து இயக்க முடியும். தற்போது 100 பறக்கும் கார்களுக்கு ஆர்டர் வந்துள்ளது. இந்த கார் சாலையிலும் ஓடும். ஆகாயத்திலும் பறக்கும் இவற்றை இந்த ஆண்டு இறுதிக்குள் தயாரித்து விடுவோம் என்றார்.
டெரபுஜியா நிறுவன தலைமை செயல் அதிகாரி கார்ல் டயட்ரிச் கனடியன் டி.வி. ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பறக்கும் கார்களை நாங்கள் 28 தடவை சோதனை செய்து பார்த்து விட்டோம். இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்தது. இந்த பறக்கும் கார்களை இயக்குவது எளிது. வருங்காலத்தில் பறக்கும் கார்களின் எண்ணிக்கை பல மடங்கு பெருகும்.
ஆகாயத்தில் வானிலை சரி இல்லாவிட்டால் விமானங்களை இயக்குவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. ஆனால் இந்த பறக்கும் கார்கள் சாலை, ஆகாயம் இரண்டிலும் பறப்பதால் இதற்கு மவுசு அதிகமாக உள்ளது என்றார்.
0 comments :
Post a Comment