background img

புதிய வரவு

பயத்தம் பருப்புப் பாயசம்

தேவையான பொருட்கள் :

பயத்தம் பருப்பு - 1/2 கப்
கடலைப் பருப்பு - 2 ஸ்பூன்
வெல்லம் - 1 கப்
பால் - 1/4 கப்
தேங்காய்த் துருவல்- 1 ஸ்பூன்
நெய் -- தேவையான அளவு
ஏலக்காய் -2

செய்முறை :

வாணலியில் சிறிது நெய் விட்டு பயத்தம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பை லேசாக வறுத்துக் கொள்ளவும்.
இதை ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து குறைவான தீயில் வேக க்கவும்.நன்கு வெந்ததும் வெல்லம் சேர்த்துஅடுப்பை குறைந்த தீயில் வைக்கவும்.வெல்லம் கரைந்து பச்சை வாசனை போனதும்,பால் சேர்க்கவும்.2 டீஸ்பூன் நெய்யில் தேங்காய்த் துருவல்,ஏலப்பொடி பொரித்துச் சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் கொதிக்கவைத்து இறக்கவும்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts