இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கில் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் தான் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் மீது இடைக்கால குற்றப்பத்திரிகையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.2009-ம் ஆண்டு பாகிஸ்தானை விட்டு வெளியேறி பர்வேஸ் முஷாரப் இப்போது லண்டனில் வசித்து வருகிறார்.
Read: In English
2007-ல் ராவல்பிண்டி நகரில் நடந்த வெடிகுண்டு சம்பவத்தில் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொல்லப்பட்டதற்கு அப்போதைய அதிபர் முஷாரப்தான் காரணம் என்று இப்போது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதற்கான இடைக்கால குற்றப்பத்திரிகை ராவல்பிண்டி பயங்கரவாத தடுப்பு நீதி்மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
பெனாசிருக்கு போதிய பாதுகாப்பு வழங்காமல் வேண்டுமென்றே அலட்சியம் காட்டினார் முஷாரப் என ஐநா விசாரணைக் குழு குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் முஷாரப் கைதாகக் கூடும் என்று கூறப்படுகிறது.
0 comments :
Post a Comment