
ஆர்யாவும், நிலாவும் காதலிப்பதாக செய்திகள் பரவியது. பின்னர் நிலா வேறு ஒருவரை கல்யாணம் செய்துகொண்டு ஓட்டல் பிஸினஸில் பிஸியாகிவிட்டார்.
அடுத்து பூஜாவும் ஆர்யாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. அப்போது இருவரும் நான் கடவுள் படத்தில் இணைந்து நடித்தனர். ஆனால் பூஜா இப்போது பெங்களூரில் ஒரு நிறுவனத்தில் வேலையில் செட்டிலாகிவிட்டார்.
மதராசபட்டணம் படத்தில் ஜோடியாக நடித்த எமியுடன் இணைத்து பேசப்பட்டார் ஆர்யா. அதிலும் உண்மையில்லை என்றாகிவிட்டது.
தற்போது கன்னட நடிகை ஷர்மிளா மந்த்ரேயை காதலிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இருவரும் படப்பிடிப்பில் ரகசியமாக சந்தித்து காதலை வளர்ப்பதாகவும் கூறப்பட்டது.
ஆனால் இதனை மறுத்துள்ள ஷர்மிளா மந்த்ரே, சமீபத்தில் இப்படிக் கூறியுள்ளார்...
"ஆர்யாவும் நானும் காதலிப்பதாக வந்த செய்திகள் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கின. ஆர்யாவுடன் தில்லு முல்லு என்ற தமிழ் படத்தில் நடிக்கிறேன். அதை எனக்கு நெருக்கமான உறவினர் தயாரிக்கிறார். கன்னடத்தில் எட்டுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன்.
என்னோடு நடித்தவர்களுடன் இணைத்து இதுபோல் எந்த கிசுகிசுக்களும் வந்தது இல்லை. என்னுடன் நடிக்கும் ஹீரோக்களுடன் நட்பு ரீதியாக நெருக்கமாக பழகுவேன்.
ஆர்யாவுடனும் அதுபோல்தான் பழகினேன். எங்களை இணைத்து வதந்திகள் பரவுவதற்குக் காரணம், வெளிப்புறப் படப்பிடிப்பில் நாங்கள் தனியாக சந்தித்து பேசியதுதான்.
அங்கு தெலுங்கு படப்பிடிப்பில் நான் இருந்தேன். பக்கத்திலேயே ஆர்யா நடித்த தமிழ் படப்பிடிப்பும் நடந்தது.
அவருடன் தில்லுமுல்லு படத்தில் நடித்து வருவதால் நண்பர்கள் என்ற முறையில் தனியாக சந்தித்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அதை காதல் என்று கதை கட்டி விட்டனர். வேறு எதுவும் இல்லை", என்றார்.
0 comments :
Post a Comment