செக் மோசடி வழக்கில், நடிகர் ரஜினியின் மனைவி லதா, மகள் சவுந்தர்யா ஆகியோருக்கு, காலையில் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. மாலையில், கடன்தொகை வழங்கியதை அடுத்து, அவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
சென்னை, தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் சுமர்சந்த் பாப்னா. இவர், சுவஸ்திக் பைனான்ஸ் கார்ப்பரேஷன் என்ற நிதி நிறுவனத்தின் உரிமையாளராக உள்ளார். நடிகர் ரஜினியின் மனைவி லதா, மகள் சவுந்தர்யா இருவரும், சுமர்சந்த் பாப்னாவிடம், "ஆக்கர் ஸ்டுடியோ பெயரில் 20 லட்சம் ரூபாய் கடன் பெற்றனர். கடன் பணத்திற்காக, சுமர்சந்த் பாப்னாவிடம் லதா, சவுந்தர்யா சார்பில், "செக் கொடுக்கப்பட்டது. அந்த, "செக் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்துள்ளது. பணத்தை திருப்பிக் கொடுப்பதற்கு இருவரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதையடுத்து, சைதாப்பேட்டை 23வது கோர்ட்டில் லதா, சவுந்தர்யா இருவர் மீதும் சுமர்சந்த் பாப்னா, "செக் மோசடி வழக்கு தொடுத்தார். வழக்கு விசாரணைக்கு கடந்த மாதம் 6ம் தேதி இருவரும் ஆஜராக வேண்டும் என அவர்களுக்கு கோர்ட் சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், இருவரும் ஆஜராகவில்லை. இவ்வழக்கு, விசாரணைக்கு வந்தது, அவர்கள் ஆஜராகவில்லை. இதையடுத்து, இருவரும் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என ஜாமீனில் வெளியே வரக்கூடிய, "பிடிவாரன்ட் காலை பிறப்பிக்கப்பட்டது.
இத்தகவல் லதா, சவுந்தர்யாவுக்கு தெரியவந்ததும், கடன் பணத்திற்கான "டிடியை வழங்கினர். இதையடுத்து, வழக்கை வாபஸ் பெறுவதாக சுமர்சந்த் பாப்னா சார்பில், நேற்று மதியம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அம்மனுவை ஏற்றுக் கொண்டு, அவ்வழக்கை டிஸ்மிஸ் செய்து மாஜிஸ்திரேட் ரவி உத்தரவிட்டார்.

0 comments :
Post a Comment