பாகிஸ்தானில் தீவிரவாதிகள் அடிக்கடி வெடிகுண்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர். வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள மார்டான் நகரில் ராணுவ முகாம் உள்ளது. இங்கு இன்று ராணுவத்துக்கு ஆள் எடுக்கும் பணி நடந்தது. '
இதில் பங்கேற்க பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் அங்கு குவிந்து இருந்தனர்.அப்போது கூட்டத்துக்கு மத்தியில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் சிக்கி 14 பேர் உயிர் இழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
பலியானவர்கள் பலர் ராணுவ வேலைக்கு வந்தவர்கள். ராணுவ அதிகாரிகள் சிலரும் பலியாகி உள்ளனர்.இந்த தாக்குதல் எப்படி நடந்தது என்று தெரியவில்லை. தற்கொலை படையை சேர்ந்த தீவிரவாதி மனித குண்டாக வந்து தாக்குதல் நடத்தி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அங்கு மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
0 comments :
Post a Comment