ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள சூடான் நாடு கடந்த திங்கட்கிழமை 2 ஆக பிரிந்து தெற்கு சூடான் என்ற தனிநாடு உதயமானது. இந்த நாட்டின் ஊரக வளர்ச்சித்துறை மந்திரியாக இருந்தவர் சிம்மிலெமி.
இவர் ஜுபாவில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்த போது திடீரென சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது பாதுகாவலரும் கொல்லப்பட்டார். இருவரையும் சுட்டு கொன்றது மந்திரியின் மைத்துனர் என்பது தெரிய வந்தது.
அவரை போலீசார் கைது செய்தனர்.சுடான் நாடு பிரிந்ததற்கு இந்த மந்திரியே முக்கிய காரணமாக இருந்தார். எனவே அரசியல் காரணங்களுக்காக அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது. ஆனால் குடும்ப தகராறில் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார் என்பது தெரியவந்தது.
0 comments :
Post a Comment