background img

புதிய வரவு

பார்லிக்கு இடைத்தேர்தல் வராது காங்கிரஸ் கட்சி உறுதி


புதுடில்லி:எதிர்க்கட்சிகள் கோரும் பார்லிமென்ட் கூட்டுக் குழு அமைக்காததால், இடைத் தேர்தலை சந்திக்க வேண்டி வரும் என்ற பேச்சுக்கே இடமில்லை என, காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பாளர் மணிஷ் திவாரி இது குறித்து நிருபர்களிடம் கூறியதாவது:பார்லிமென்ட் கூட்டுக் குழுவை அமைக்காததால், இடைத்தேர்தல் வராது; ஐந்தாண்டு காலம் ஆட்சியில் இருப்போம். பார்லிமென்ட் கூட்டுக் குழு அமைப்பது குறித்து நாங்கள் பலமுறை விளக்கி விட்டோம். ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விரிவாக விவாதிக்க, நாங்கள் தயார். ஆனால், பாரதிய ஜனதா கட்சி, பார்லிமென்ட் கூட்டுக் குழுவை அமைக்கும்படி வற்புறுத்துகிறது.
பார்லிமென்ட் கூட்டுக் குழுவை நாங்கள் எதிர்க்கவில்லை. இந்த குழு அமைப்பதற்கு முன்னதாக இது பற்றி பார்லிமென்டில் விரிவாக விவாதிக்க வேண்டும் என விரும்புகிறோம். பார்லிமென்ட் கூட்டுக் குழு அமைத்தாலும் கூட, அது பற்றிய அறிவிப்பை பார்லிமென்டுக்கு வெளியே தெரிவிக்க மாட்டோம். எங்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம்.ஊழலின் அரசராக பிரதமர் மன்மோகன் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குறை கூறுகின்றன. ஒரு பொய்யை பல முறை கூறுவதால் அது உண்மையாகி விடாது. எதிர்க்கட்சியினரின் அரசியல் சதியை எப்படி முறியடிக்க வேண்டும் என்பது காங்கிரசுக்கு தெரியும். எங்கள் மீது ஊழல் புகார் கூறி வரும் பாரதிய ஜனதா, அக்கட்சி ஆளும் கர்நாடகாவில் நில ஒதுக்கீடு ஊழலில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு திவாரி கூறினார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts