தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரியின் இளைய மகன் ஜீவா. தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ள இவர், ஆரம்பகாலத்தில் சினிமாவிற்கு வந்த போது இவரது நடிப்பு அந்தளவிற்கு எடுபடவில்லை. ஆனால் ராம் படத்திற்கு பின்னர் இவரது ரேஞ்ச் முற்றிலுமாக மாறியது. தற்போது தமிழில் டாப்-10 நடிகர்களில் ஒருவராக உள்ள ஜீவா, ஈ.சி.ஆர்., ரோட்டில் ஒரு ஆடம்பர பங்களா ஒன்றை கட்டி வருகிறார். இந்த வீட்டிற்கு மொத்த ஆகும் செலவு ரூ.10 கோடியாகும். தந்தை ஆர்.பி.சவுத்ரி பெரிய கோடீஸ்வரராக இருந்தும் தன்னுடைய சொந்த சம்பாத்தியத்தில் இந்த வீட்டை கட்டி வருகிறார் ஜீவா.
ஏற்கனவே இந்த ஈ.சி.ஆர். ரோட்டில் கமல், விஜய், அஜீத், சிம்பு உள்ளிட்ட நடிகர்களுக்கும் வீடு உள்ளது. இப்போது அந்த வரிசையில் ஜீவாவும் சேர்ந்துள்ளார்.
ஏற்கனவே இந்த ஈ.சி.ஆர். ரோட்டில் கமல், விஜய், அஜீத், சிம்பு உள்ளிட்ட நடிகர்களுக்கும் வீடு உள்ளது. இப்போது அந்த வரிசையில் ஜீவாவும் சேர்ந்துள்ளார்.
0 comments :
Post a Comment