background img

புதிய வரவு

சூர்யா படப்பிடிப்பால் போக்குவரத்து பாதிப்பு!

ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் ஏழாம் அறிவு படத்தின் ஷூட்டிங் சென்னைப் பகுதிகளில் நடந்து வருகிறது. நேற்று பிற்பகல் அடையாறு பழைய மேம்பாலத்தில் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டது.

இருநூறுக்கும் அதிகமான துணை நடிகர் நடிகைகள் நடனமான, அவர்களுக்கு முன் சூர்யா ஆடிக் கொண்டிருப்பது போல காட்சி எடுக்கப்பட்டது.

இதைப் பார்க்க, வாகனங்களில் வந்தவர்களும் பொதுமக்களும் குவிந்துவிட, போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் பட்டினப்பாக்கம் சிக்னலிலிருந்து இந்திரா நகர், கஸ்தூரிபா நகர் வரை வாகனங்கள் மெதுவாக ஊர்ந்தபடி சென்றன.

கொளுத்தும் வெயிலிலில் வாகனங்கள் நடுரோட்டில் நின்றதால் பொதுமக்கள் கடுப்படைந்தனர்.

ஏற்கெனவே திருப்பூர் அருகே ஒரு கிராமத்தில், மக்களின் குடிநீர் குளத்தை அசுத்தப்படுத்தியதற்காக ஏழாம் அறிவு படக்குழுவினரை மக்கள் விரட்டியடித்தது நினைவிருக்கலாம்!

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts