background img

புதிய வரவு

இனி இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு பெரிய முதலீடு-வாரன் பஃபே அறிவிப்பு

பெங்களூர்: அடடா... இந்தியாவுக்கு இவ்வளவு தாமதமாக வந்துவிட்டேனே என வருத்தப்பட்டு கூறினார் உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான வாரன் பஃபே.

உலகின் மூன்றாவது பெரிய பணக்காரர் வாரன் பஃபே. பெர்க்ஷையர் ஹதாவே எனும் தனது நிறுவனம் மூலம் உலகம் முழுக்க முதலீடு செய்து வருகிறார்.

இந்தியாவில் பெங்களூரில் உள்ள டேகு டெக் நிறுவனத்தின் 80 சதவீத பங்குகளில் முதலீடு செய்துள்ளது வாரன் பஃபே நிறுவனம்.

இதுவரை இந்தியாவுக்கே வராமலிருந்த வாரன் பஃபே, முதல் முறையாக நேற்று முன்தினம் இந்தியாவுக்கு வந்தார். அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. இந்தியாவில் முதலீட்டுக்கான வாய்ப்புகள், முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும் பாதுகாப்பு மற்றும் கவுரம் போன்றவை தன்னை வியக்க வைப்பதாகக் கூறிய பஃபே, "இவ்வளவு தாமதமாக, இந்த 80 வயதில் இந்தியாவுக்கு வந்துவிட்டேனே" என வருத்தமாகக் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், "இனி கடந்த காலம் பற்றிப் பேசத் தேவையில்லை. இதுவரை இந்தியாவில் குறைந்த அளவே முதலீடு செய்திருந்தேன். இனி ஆண்டுக்கு ஒரு பெரிய முதலீட்டை எனது பெர்க்ஷையர் ஹதாவே மூலம் இந்தியாவில் செய்யப் போகிறேன்," என்றார்.

டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கையும் சந்திக்கிறார் பஃபே.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts