சென்னை: சினிமாவை விட அரசியல் கஷ்டம். சினிமா பார்த்து விசிலடித்துக் கைதட்டுபவர்கள் எல்லாம் ஓட்டுப் போட மாட்டார்கள் என்பதை விஜய் புரிந்து கொள்ள வேண்டும், என்று நடிகை குஷ்பு அட்வைஸ் செய்துள்ளார்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார், அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வார் என பரபரப்பாக பேசப்படுகிறது.
இந்தத் தேர்தலுக்குப் பிறகு தனிக்கட்சி துவங்கி முழு நேர அரசியலில் குதிப்பார் என்றும் அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகரனே கூறிவருகிறார். விஜய்யும் விரைவில் அரசியலுக்கு வருவேன் என்று பேசி வருகிறார். இதற்காக தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றியுள்ளார்.
விஜய் அரசியலுக்கு வருவது பற்றி உங்கள் கருத்து என்ன என்று நடிகை குஷ்புவிடம் கேட்டபோது, "மக்கள் பணிகளில் ஈடுபட விரும்பும் யாரும் அரசியலில் ஈடுபடலாம். விஜய்யும் தாராளமாக வரலாம்.
ஆனால் சினிமா வேறு அரசியல் வேறு என்பதை உணர வேண்டும். சினிமாவில் நடிக்கும்போது ரசிகர்கள் கைதட்டுவார்கள். விசில் அடித்தும் ரசிப்பார்கள். அவர்கள் எல்லோருடைய ஓட்டும் நமக்குத்தான் விழும் என்று எதிர்பார்த்து அரசியலுக்கு வரக்கூடாது. சினிமாவை விட அரசியல் உண்மையிலேயே கஷ்டமான விஷயம்தான்...", என்றார்.

0 comments :
Post a Comment