கொழும்பு:இலங்கையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் அதிபர் ராஜபக்ஷேவின் ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது.இலங்கையில் நேற்று முன்தினம் 234 கவுன்சில்களுக்கு தேர்தல் நடந்தது. இதில் ராஜபக்ஷே தலைமையிலான ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணி 205 இடங்களை கைப்பற்றியுள்ளது. எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி ஒன்பது இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தமிழ் தேசிய கூட்டணி 12 இடங்களிலும், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் நான்கு இடங்களிலும், மற்றொரு தமிழ் கட்சி ஒரு இடத்திலும், சுயேச்சைகள் மூன்று இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.கடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்ஷே கட்சி 58 சதவீத ஓட்டுகளை பெற்றது. ஆனால், இந்த தேர்தலில் 55 சதவீத ஓட்டுகளே கிடைத்துள்ளன. ஓட்டுகளின் எண்ணிக்கை 3 சதவீதம் குறைந்துள்ளது.
0 comments :
Post a Comment