கன்னட தயாரிப்பாளர் கணேஷ் உடன் ஏற்பட்ட பிரச்சனையால், இனிமேல் கன்னட சினிமாவில் நடிக்கவே மாட்டேன் என்று அதிரடியாக முடிவெடுத்துள்ளார் நடிகை திவ்யா ஸ்பந்தனாஸ்.
தமிழில் குத்து, கிரி, பொல்லாதவன், சிங்கம் புலி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை திவ்யா ஸ்பந்தனாஸ். தவிர கன்னடத்திலும் பிரபல நடிகையாக உள்ளார். சமீபத்தில் கன்னடத்தில் திவ்யா நடித்த "தண்டம் தஷகுணம்" படத்தின் ஆடியோ ரிலீஸ் நடைபெற்றது. இதில் நடிகை திவ்யா ஸ்பந்தனாஸ் கலந்து கொள்ளவில்லை. இதனால் படத்தின் தயாரிப்பாளர் கணேஷூக்கும், திவ்யாவுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக கன்னட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார் கணேஷ். 48மணி நேரத்திற்குள் இதுகுறித்து திவ்யா விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தது தயாரிப்பாளர் சங்கம். இந்நிலையில் இனிமேல் கன்னட சினிமாவில் நடிக்கவே மாட்டேன் என்று அதிரடியாக தெரிவித்துள்ளார் திவ்யா ஸ்பந்தனாஸ்.
இதுகுறித்து திவ்யா தன்னுடைய ப்ளாக்கில் கூறியுள்ளதாவது, "தண்டம் தஷகுணம்" பட பாடல் வெளியீட்டு விழாவில் நான் கலந்து கொள்ளாததை பெரிய பிரச்சனையாக்கிவிட்டார் தயாரிப்பாளர் கணேஷ். இப்பிரச்சனையால் படத்திற்கு பெரிய விளம்பரம் தேடியுள்ளார். அதுமட்டுமல்ல படத்தை முடிப்பதற்காக என்னிடம் பெரும்தொகையை கடனாக பெற்றுள்ளார் கணேஷ். அதை இன்னும் திருப்பி தரவில்லை. இதுதொடர்பான பத்திரங்கள் என்னிடம் உள்ளன. அதை வைத்து கணேஷ் மீது விரைவில் வழக்கு தொடர உள்ளேன்.
கன்னட சினிமாவில் எனக்கு எதிராக பெரும் சதி நடக்கிறது. அவர்களுடன் போட்டி போட இனி என்னால் முடியாது. வாழ்கின்ற கொஞ்ச காலமாவது நிம்மதியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஆகையால் கன்னட சினிமாவில் இருந்து விலகுவது நல்லது என்று நினைக்கிறேன். இனிமேல் கன்னடத்தில் நடிக்கவே மாட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

0 comments :
Post a Comment