background img

புதிய வரவு

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமியின் காதல் பரிசு; நடிகை குட்டி ராதிகாவுக்கு ரூ.65 கோடி டி.வி.சேனல்

“இயற்கை” படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் குட்டி ராதிகா. “வர்ணஜாலம்” படத்தில் ஸ்ரீகாந்துடன் நடித்தார். கன்னட படங்களில் முன்னணி நடிகையாக இருந்தார். இரு வருடங்களுக்கு முன் குட்டி ராதிகா சினிமாவுக்கு முழுக்கு போட்டு திடீரென மாயமானார்.

அவர் எங்கு சென்றார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. சில மாதங்களுக்கு முன் திடீரென ஒரு வயது குழந்தையுடன் பெங்களூர் வந்தார். அந்த குழந்தை எனது குழந்தை என்று அறிமுகம் செய்தார். அக்குழந்தையின் தந்தை கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி என பரபரப்பன அறிவிப்பையும் வெளியிட்டார்.

அக்குழந்தைக்கு சமிக்ஷா கே.சாமி என்று பெயரிட்டு இருந்தார். குமாரசாமி இதனை மறுக்கவில்லை. கடந்த வருடம் குட்டி ராதிகா தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதில் குமாரசாமி பங்கேற்றார். குட்டி ராதிகாவுக்கு கேக் ஊட்டி விட்டார்.

குட்டி ராதிகாவுக்கு காதல் பரிசாக டி.வி. சேனல் ஒன்றையும் குமாரசாமி வாங்கி கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சேனலின் மதிப்பு ரூ.65 கோடியாம். சமாயா என்ற இந்த சேனலுக்கு உரிமையாளராக இருந்து குட்டி ராதிகா நிர்வகித்து வருகிறார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts