background img

புதிய வரவு

சேப்பாக்கத்தில் நாளை தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து மோதல்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 4 “லீக்” ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்தப்படுகிறது. நியூசிலாந்து- கென்யா, தென்ஆப்பிரிக்கா- இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ்- இங்கிலாந்து, இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் ஆகிய ஆட்டங்கள் சென்னைக்கு ஒதுக்கப்பட்டது.

கடந்த 20-ந்தேதி நடந்த ஆட்டத்தில் நியூசி லாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் கென்யாவை வீழ்த்தியது. சேப்பாக்கம் மைதானத் தில் 2-வது ஆட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

காலை 9.30 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தில் “பி” பிரிவில் உள்ள தென்ஆப்பிரிக்கா- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. தென்ஆப்பிரிக்கா தொடக்க ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை தோற் கடித்தது. 2-வது ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை 231 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இங்கிலாந்து அணி தொடக்க ஆட்டத்தில் நெதர்லாந்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்தியாவுடன் மோதிய 2-வது ஆட்டம் “டை” ஆனது. 3-வது ஆட்டத்தில் அயர்லாந்திடம் அதிர்ச்சிகரமாக தோற்றது. டிவில்லியர்ஸ் தென்ஆப்பிரிக்கா 3-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணியில் டிவில்லியர்ஸ் மிகவும் நல்ல நிலையில் இருக்கிறார்.

அவர் 2 ஆட்டத்திலும் சதம் அடித்து இருக்கிறார். இதுதவிர ஹசிம் அம்லா, கேப்டன் சுமித், காலிஸ், டுமினி போன்ற உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களும் அந்த அணியில் உள்ளனர். பந்துவீச்சில் புதுமுக வீரர் இம்ரான் தாகீர் மிகவும் சிறப்பாக பந்து வீசி வருகிறார். பாகிஸ்தானில் பிறந்த அவர் 2 ஆட்டத்திலும் முத்திரை பதித்தார். ஸ்டெயின், மார்னே மார்கல், டிசோட்சோபே, போத்தா போன்ற சிறந்த பவுலர்களும் அந்த அணியில் உள்ளனர்.

அதிர்ச்சியில் இருந்து மீளுமா? அயர்லாந்திடம் தோற்ற அதிர்ச்சியில் இருந்து இங்கிலாந்து அணி இன்னும் மீளவில்லை. பலம் வாய்ந்த தென்ஆப்பிரிக்காவை வெல்வதே அந்த அணிக்கு ஆறுதல் கிடைக்கும். கேப்டன் ஸ்டாரஸ், பெல், டிராட், பீட்டர்சன் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், பிராட், பிரெஸ்னென், சுவான் போன்ற சிறந்த பவுலர்களும் அந்த அணியில் உள்ளனர். தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் தென்ஆப்பிரிக்காவை தோற்கடிக்க 5-வது இடத்தில் இருக்கும் இங்கிலாந்து கடுமையாக போராடும்.

ரசிகர்கள் நியூசிலாந்து-கென்யா அணிகள் சென்னையில் மோதிய ஆட்டம் மிகவும் கேவலமாக இருந்தது. கென்யா 69 ரன்னில் சுருண்டதால் ஆட்டம் 2? மணி நேரத்தில் முடிந்தது. போட்டியை காணவந்த ரசிகர்களும் குறைவு. போட்டி மிக குறைந்த நேரத்தில் விறுவிறுப்பு இல்லாததால் அந்த ரசிகர்களும் ஏமாற்றம் அடைந்தனர்.

தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் பலம் பொருந்தியவை என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும். இதனால் சேப்பாக்கம் மைதானத்துக்கு நாளை அதிகமான ரசிகர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆட்டம் இ.எஸ்.பி.என். டெலிவிசனில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts