background img

புதிய வரவு

நம்பர்-1 இடம்: ப்ரியாமணி சபதம்

பொதுவாக சினிமாவில் நம்பர்-1 இடத்தை பிடிக்க வேண்டும் என்பது நடிகைகளின் கனவு. இதனை சிலர் வெளிப்படையாக சொல்லிவிடுவார்கள், சிலர் அதனை லட்சியமாக வைத்து கொண்டு அதற்காக பாடுபடுவார்கள். அந்தவகையில் நடிகை ப்ரியாமணியும் சினிமாவில் தான், நிச்சயமாக நம்பர்-1 இடத்தை பிடிப்பேன் என்று சபதம் ஏற்றுள்ளார்.

பருத்திவீரன் படத்திற்காக தேசிய விருது பெற்ற பின்னர் நடிகை ப்ரியாமணியின் ரேஞ்ச் முற்றிலுமாக மாறியது. ஏராளமான பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் பருத்திவீரன் படத்தை போல் எந்தவொரு படமும் அவருக்கு பெயர் பெற்று தரவில்லை. தமிழில் வாய்ப்பு குறையவும் தெலுங்கிற்கு போனார். அங்கு அம்மணி நடிப்புடன், கவர்ச்சியும் காட்ட ஆரம்பித்தார். ஆனால் ப்ரியாமணியின் நடிப்பு எடுபடவில்லை. கடைசியாக எப்படிபட்ட வேடத்திலும் நடிக்க தயார் என்று அறிவித்து இருந்தார். இந்நிலையில் சினிமாவில் நம்பர்-1 இடத்தை பிடிப்பேன் என்று புதிதாக சபதம் ஏற்றுள்ளார்.

இதுகுறித்து ப்ரியாமணி கூறுகையில், எல்லா நடிகைகளை போல எனக்கும் நம்பர்-1 இடத்தை பிடிக்க வேண்டும் என்பது எனது ஆசை. அதற்காக கடுமையாக உழைத்து வருகிறேன். நடிகைகளுக்கு தேசிய விருது பெறுவதுதான் கனவு எனக்கு அந்த கனவு நிறைவேறி விட்டது. சிறந்த நடிகை என்பதையும் நிரூபித்து விட்டேன். இனிமேல் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க விரும்புகிறேன். சினிமாவில் நீடிப்பதற்கு கவர்ச்சி அவசியம். நானும் கதைக்கு தேவையென்றால் அதுபோன்று நடிப்பேன். தேவை இல்லாமல் கவர்ச்சி காட்ட மாட்டேன். தற்போது தெலுங்கில் நிறைய படவாய்ப்புகள் வந்து கொண்டு இருக்கிறது என்றார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts