background img

புதிய வரவு

சென்னை போட்டியில் ரெய்னா?

சென்னை: வெஸ்ட் இண்டீசிற்கு எதிராக சென்னையில் நடக்கும் உலக கோப்பை போட்டியில், யூசுப் பதானுக்குப் பதிலாக சுரேஷ் ரெய்னா களமிறங்குவார் என்று தெரிகிறது.
உலக கோப்பைக்கான இந்திய அணியில் பல்வேறு போட்டிகளுக்கு இடையில் இடம் பெற்றவர் இளம் ரெய்னா (24). இதுவரை 111 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று, 3 சதம், 16 அரைசதம் அடித்துள்ளார். ஆனால் கடைசியாக பங்கேற்ற, 10 போட்டிகளில் ஒரு அரைசதம் உட்பட, 233 ரன்கள் தான் எடுத்துள்ளார்.
தவிர, "ஷார்ட் பிட்ச்' பந்துகளில் தொடர்ந்து திணறி வருகிறார். இந்த நேரத்தில் விராத் கோஹ்லி, யூசுப் பதானின் வளர்ச்சி அணியில் இவரது இடத்தை கேள்விக் குறியாக்கியது. இருப்பினும், சென்னையில் நடந்த பயிற்சி போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக 26 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அசத்தினார்.
இருப்பினும், யூசுப் பதானுக்கு வாய்ப்பு சென்றது. இவரிடம் இருந்து அதிகமாக எதிர்பார்த்த நிலையில், இதுவரை பங்கேற்ற 5 போட்டிகளில் 63 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் சென்னையில் வரும் 20 ம் தேதி நடக்கும் வெஸ்ட் இண்டீசிற்கு எதிரான போட்டியில், யூசுப் பதானுக்குப் பதில் ரெய்னா இடம் பெற வாய்ப்பு அதிகரித்துள்ளது.
அதேபோல, தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் சொதப்பிய ஆஷிஸ் நெஹ்ராவின் இடமும் பறிபோகிறது. இவருக்குப் பதில் அஷ்வின் இடம் பெற வாய்ப்பு இருக்கிறது.
சென்னை தான் அஷ்வினின் சொந்த ஊர் என்பதால், இவரது <உலக கோப்பை அறிமுகம், அரங்கேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts