background img

புதிய வரவு

வாழ்க்கையில் முன்னேற பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு தேவை; ஸ்ரேயா, ஹன்சிகா, இலியானா வற்புறுத்தல்

உலக மகளிர் தினம் இன்று கொண்டாடப் பட்டது. இதையொட்டி நடிகைகள் அளித்த பேட்டி வருமாறு:-

பெண்களை முன்னேற விடாமல் நிறைய தடைகள் இருக்கு. அவற்றை தகர்க்க வேண்டும். பெண்கள் தலைகுனிந்து நடக்கனும், சமையலறையில் முடங்கனும், சத்தமா பேசக் கூடாது, படிக்க கூடாது என்றெல்லாம் ஒரு காலத்தில் கட்டுப்பாடு விதித்தனர். அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் மீண்டு வருகிறார்கள்.

ஆண்களுக்கு சமமாக பெண்கள் உயர வேண்டும். பெண்களை கவுரவமாக நடத்த வேண்டும். பெண்களுக்கு மரியாதை தர வேண்டும் என்று மேடையில் முழங்கினால் போதாது. அதை நடைமுறைப்படுத்த வேண்டும். என்னை பொறுத்தவரை எங்கோவது பெண்களுக்கு அநியாயம் நடந்தால் அதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டேன்.

பெண்கள் சமுதாயத்தில் முன்னேற 33 சதவீத இட ஒதுக்கீடு அவசியம். அந்த மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி அமல்படுத்த வேண்டும். அப்போதுதான் பெண்கள் வாழ்க்கை தரம் உயரும்.

நீது சந்திரா:- நான் தமிழில் யாவரும் நலம் படத்தில் நடித்துள்ளேன். தற்போது ஆதிபகவான் படத்தில் நடித்து வருகிறேன். இதன் படப்பிடிப்புக்காக பீகார் மாநிலத்தில் உள்ள ஜெய்சல்மார் கிராமத்துக்கு சென்றேன். ஆண்கள், குழந்தைகள் நிறைய பேர் வந்து ஆட்டோ கிராப் வாங்கினர்.ஒரு பெண்ணை கூட வரவில்லை.

காரணம் கேட்டேன். எங்கள் ஊரில் பெண்கள் வீட்டு வாசலைத் தாண்டி வெளியே வர மாட்டார்கள். திருவிழா நடக்கும் போது மட்டும் சாமி கும்பிட வருவார்கள் என்றனர். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நானும் பீகாரை சேர்ந்தவள்தான்.

வீடு வீடாக சென்று பெண்களை சந்தித்து என்னைப் போல் சுதந்திரமாக வெளியே வாருங்கள் என்றேன். சிரித்துக் கொண்டு உள்ளே ஓடி விட்டனர். அவர்களுக்கு கல்வி அறிவு ஊட்ட வேண்டும். சமூக சேவை அமைப்புகளை அழைத்து போய் அப்பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த செய்துள்ளேன். 33 சதவீத பெண்கள் மசோதாவை அமல்படுத்தினால் நிலைமை உயரும்.

ஹன்சிகா மோட் வானி:-

சினிமாவுக்கு வரும்முன் பெற்றோரை சார்ந்து இருந்தேன். சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு சொந்தக் காலில் நிற்கிறேன். முடிவுகளையும் நானே எடுக்கிறேன். பெண்கள் சுயமாக சம்பாதித்தால்தான் சுதந்திரமாக வாழ முடியும். ஆண்கள் சம்பாத்தியத்தை நம்பி இருந்தால் அவர்கள் சொல்வதைத்தான் கேட்க வேண்டும்.

திருமணத்துக்கு முன் பெற்றோர் பின்னாலும் திருமணமானதும் கணவர் பின்னாலும் ஒளிகிற நிலைமைதான் பெண்களுக்கு இருக்கிறது. அந்த நிலைமை மாறனும்னா பெண்கள் படிக்க வேண்டும். சம்பாதிக்க வேண்டும். 33 சதவீத பெண்கள் மசோதாவை நிறைவேற்றினால் இன்னும் முன்னேற்றம் கிடைக்கும்.

இலியானா:-பெண்கள் மென்மையானவர்கள் என்று சொல்லி ஆண்கள் அடக்கி வைத்துள்ளனர். அதிலிருந்து நாம் வெளியே வரணும். தேவை வரும்போது கடினமாக மாற வேண்டும். பயம், நடுக்கத்தையெல்லாம் விட வேண்டும். படிக்காதவர்களுக்கு தான் பயம் வரும். எனவே எல்லோரும் படிக்க வேண்டும்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts