பெங்களூரு: கென்யாவுக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் காலிறுதிக்கு முன்னேறியது. தவிர, உலக கோப்பை அரங்கில் தொடர்ந்து 33 போட்டிகளில் தோல்வியடையாமல் உள்ளது.
இந்தியா, இலங்கை, வங்கதேச மண்ணில் பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நேற்று நடந்த "ஏ பிரிவு லீக் போட்டியில் "நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, கென்யா அணிகள் மோதின. "டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங், பேட்டிங் தேர்வு செய்தார்.
ஹாடின் அரைசதம்:
ஆஸ்திரேலிய அணிக்கு ஷேன் வாட்சன், பிராட் ஹாடின் ஜோடி சுமாரான துவக்கம் அளித்தது. முதல் விக்கெட்டுக்கு 36 ரன்கள் சேர்த்த போது வாட்சன் (21) அவுட்டானார். மறுமுனையில் பொறுப்பாக ஆடிய ஹாடின் (65) அரைசதம் கடந்து ஆறுதல் அளித்தார். கேப்டன் பாண்டிங் (36) பெரிய அளவில் சாதிக்கவில்லை. கேமிரான் ஒயிட் (2) வந்த வேகத்தில் நடையை கட்டினார்.
சூப்பர் ஜோடி:
பின் அபாரமாக ஆடிய மைக்கேல் கிளார்க், ஒருநாள் அரங்கில் தனது 47வது அரைசதம் கடந்தார். இம்முறை முதல் போட்டியில் களமிறங்கிய மைக்கேல் ஹசி, 34வது அரைசதம் கடந்து முத்திரை பதித்தார். இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 114 ரன்கள் சேர்த்த போது மைக்கேல் ஹசி (54) வெளியேறினார். மைக்கேல் கிளார்க், 80 பந்தில் 93 ரன்கள் எடுத்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 324 ரன்கள் குவித்தது.
திணறல் பந்துவீச்சு:
கடின இலக்கை விரட்டிய கென்ய அணிக்கு ஒயுமா (4), ஒபன்டா (14) மோசமான துவக்கம் அளித்தனர். அடுத்து வந்த டேவிட் ஒபுயா (12) "ரன்-அவுட் ஆனார். பின் இணைந்த காலின்ஸ் ஒபுயா, டான்மே மிஸ்ரா ஜோடி பொறுப்பாக ஆடியது. பந்துவீச்சில் ஆஸ்திரேலிய வீரர்கள் திணறினர். இதனை பயன்படுத்திய மிஸ்ரா, ஒருநாள் அரங்கில் தனது 5வது அரைசதம் அடித்தார். இவர் 89 பந்தில் 72 ரன்கள் எடுத்திருந்த போது, மைக்கேல் கிளார்க்கின் துல்லிய துரோவில் "ரன்-அவுட் ஆனார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த காலின்ஸ் ஒபுயா, தனது 9வது அரைசதத்தை பதிவு செய்தார்.
காலின்ஸ் அசத்தல்:
அடுத்து களமிறங்கிய ராகெப் படேல் (6) "ரன்-அவுட் ஆனார். தனிநபராக போராடிய காலின்ஸ் ஒபுயா, 98 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். கென்ய அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 264 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. ஆஸ்திரேலியா சார்பில் டெய்ட் 2, பிரட் லீ ஒரு விக்கெட் வீழ்த்தினர். ஆட்டநாயகனாக கென்யாவின் காலின்ஸ் ஒபுயா தேர்வு செய்யப்பட்டார்.
ஸ்கோர் போர்டு
ஆஸ்திரேலியா
வாட்சன்(கே)மவுரிஸ்(ப)ஒதியம்போ 21(17)
ஹாடின்(கே)படேல்(ப)கமன்டே 65(79)
பாண்டிங்-எல்.பி.டபிள்யு.,(ப)ஒபுயா 36(54)
கிளார்க்(கே)படேல்(ப)ஒதியம்போ 93(80)
ஒயிட்(ப)கமன்டே 2(6)
ஹசி(கே)டேவிட்ஒபுயா(ப)ஒதியம்போ 54(43)
ஸ்மித்-அவுட் இல்லை- 17(15)
ஜான்சன்-அவுட் இல்லை- 12(7)
உதிரிகள் 24
மொத்தம் (50 ஓவரில், 6 விக்.,) 324
விக்கெட் வீழ்ச்சி: 1-38(வாட்சன்), 2-127(ஹாடின்), 3-131(பாண்டிங்), 4-143(ஒயிட்), 5-257(மைக்கேல்ஹசி), 6-304(கிளார்க்).
பந்துவீச்சு: ஒடாயோ 10-0-50-0, ஒடியனோ 8-0-75-0, ஒதியம்போ 10-1-57-3, நிகோகே 8-0-56-0, ஒபுயா 4-0-33-1, கமன்டே 10-0-46-2
கென்யா
மவுரிஸ்(கே)ஹெடின்(ப)பிரெட் லீ 4(13)
ஒபாண்டா(ப)டெய்ட் 14(10)
ஒபுயா-அவுட்இல்லை- 98(129)
டேவிட் ஒபுயா-ரன்அவுட்-(மைக்கேல்ஹசி/ஹாடின்) 12(16)
மிஸ்ரா--ரன்அவுட்-(கிளார்க்) 72(89)
ஒடாயோ(ப)டெய்ட் 35(38)
படேல்-ரன் அவுட்-(கிரெஜ்ஜா/டெய்ட்) 6(7)
கமன்டே-அவுட் இல்லை- 0(0)
உதிரிகள் 23
மொத்தம் (50 ஓவரில், 6 விக்.,) 264
விக்கெட் வீழ்ச்சி: 1-12(மவுரிஸ்), 2-21(ஒபண்டா), 3-46(டேவிட் ஒபுயா), 4-161(மிஸ்ரா), 5-247(ஒடாயோ), 6-263(கமன்டே).
பந்துவீச்சு: பிரெட் லீ 8-1-26-1, டெய்ட் 8-0-49-2, ஜான்சன் 8-1-40-0, ஸ்மித் 6-0-36-0, கிரெஜ்ஜா 8-0-36-0, கிளார்க் 5-0-21-0, வாட்சன் 7-0-48-0.

0 comments :
Post a Comment