கர்நாடகாவில் நடந்த கன்னட மாநாட்டில் நடிகை ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்டார். மாநாட்டுக்கு பிறகு நட்சத்திர ஹோட்டலில் நடந்த சிறப்பு விருந்திலும் அவர் பங்கேற்றார். உலக கன்னட மாநாடு பெல்காமில் நடந்தது. கர்நாடகாவை பிறப்பிடமாகக் கொண்ட ஐஸ்வர்யா ராயுக்கும் விழாவுக்கான அழைப்பிதழ் அனுப்பப் பட்டிருந்தது. இந்த விழாவில் ஐஸ்வர்யா பங்கேற்பாரா அல்லது புறக்கணிப்பாரா? என்ற கேள்வி சமீப நாட்களாக எழுந்திருந்தது. ஒரு சில அமைப்புகள் ஐஸ்வர்யா ராய்க்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் மாநாட்டில் உற்சாகத்துடன் பங்கேற்றார். பளபளக்கும் பட்டுச்சேலை அணிந்து விழாவுக்கு வந்திருந்த ஐஸ்வர்யா ராயை கர்நாடக முதல்வர் எடியூரப்பா மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்றனர்.
70 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராய் மேடையேறி பேசினார். அப்போது அவர் பேசுகையில், உலக கன்னட மாநாட்டில் பங்கேற்க எனக்கு அழைப்பு விடுத்த, கர்நாடக அரசு மற்றும் கன்னட அமைப்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது பெருமைக்குரிய விஷயமாகும். இந்த விழாவை நான் ஏன் புறக்கணிக்க வேண்டும். நானும் இந்த மாநிலத்தில்தான் பிறந்தேன். அனைத்து மொழிகளையும் நேசிக்கிறேன். அதே நேரம் பிறந்த மாநிலத்தில் நடக்கும் ஒரு விழாவில் பங்கேற்பதை விரும்புகிறேன். இந்த விழாவில் பங்கேற்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த கன்னட மக்களுக்கு சல்யூட் அடிக்கிறேன், என்று கூறி சல்யூட் அடித்தார். இதனை விழாவில் பங்கேற்ற அனைவரும் கைத்தட்டி வரவேற்றனர். முதல்வர் உள்பட பலரும் ஐஸ்வர்யா ராயின் பேச்சை ரசித்து கேட்டு, கைதட்டினர்.
மாநாடு நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர் இரவில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் முதல்வர் எடியூரப்பா ஏற்பாடு செய்த விருந்தில் ஐஸ்வர்யா ராய் பங்கேற்றார்.

0 comments :
Post a Comment