background img

புதிய வரவு

ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும்

சோர்வடையும் நேரத்தில் ஒரு கப் சூடான டீ மூளையை சுறுசுறுப்பாக்கும் என லண்டன் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
லண்டனை சேர்ந்த நரம்பியல் விஞ்ஞான அமைப்பான நியூட்ரிஷன்ஸ் நியூரோசயின்ஸின் சார்பில் 44 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களிடம் குறுக்கெழுத்து புதிர்கள் அளிக்கப்பட்டன. அவற்றை நிரப்ப மூளையை கசக்கி யோசித்ததில் பலர் சோர்வடைந்தனர்.

அவர்களது மூளையை ஆராய்ச்சியாளர்கள் பரிசோதித்தனர். மூளை நரம்புகளின் சுறுசுறுப்புக்கு தேவையான அமினோ ஆசிட் குறைந்திருந்தது தெரியவந்தது. சோர்வாக இருந்த மாணவர்களுக்கு சூடாக ஒரு கப் டீ தரப்பட்டது. பிறகு சோதித்ததில் எல் தேனைன் என்ற அமினோ ஆசிட் விரைவாக விலகியது உறுதியானது.

இந்த எல் தேனைன் அமினோ ஆசிட் பச்சைத் தேயிலை காபியிலும், காபின் ஆகியவற்றிலும் இருக்கிறது. எனினும் சாதாரண டீயில் அது உடனடியாக மூளை நரம்புகளை புத்துணர்ச்சி அடையச் செய்வது ஆய்வில் தெரிய வந்தது.

டென்மார்க்கில் நடந்த மற்றொரு ஆய்வில் 40 வயதுக்கு உட்பட்டவர்களிடம் அசதி, சோர்வு ஆகியவற்றை விரைவாக போக்குவதில் டீ முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இது பற்றி இங்கிலாந்து தேயிலை ஆலோசனை குழுவைச் சேர்ந்த டிம் பாண்ட் கூறுகையில்,"மூளைக்கு புத்துணர்வு அளிப்பதில் தேயிலையின் பங்கு பற்றி ஏற்கனவே பல ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இந்த லேட்டஸ்ட் ஆய்வில் அது மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது" என்றார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts