background img

புதிய வரவு

முருங்கைக்காய் கட்லட்

இந்த கட்லட்டில் நான் எண்ணெயே சேர்க்காமல் பார்லி,ஒட்ஸில் செய்துள்ளேன்.பார்லி கொஞ்சம் கொழகொழப்பாக இருப்பதால் கட்லட் ஷேப் சரியாக வரவில்லை.நான் ப்ரெட் க்ரம்ஸில் புரட்டாமல் பேக் செய்துள்ளேன்.விருப்பமுள்ளவர்கள் அதில் புரட்டியும் பேக் செய்யலாம்.

தே.பொருட்கள்:

வேகவைத்த பார்லி – 1/4 கப்
பொடித்த ஒட்ஸ் – 1/2 கப்
முருங்கைக்காய் – 2
துருவிய கேரட் – 1 சிறியது
பொடியாக அரிந்த வெங்காயம் – 1
பொடியாக அரிந்த புதினா,கொத்தமல்லி – சிறிதளவு
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் – 1
பொடியாக அரிந்த இஞ்சி – 1/4டீஸ்பூன்
எண்ணெய் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு

செய்முறை :

*முருங்கைக்காயை அரிந்து வேகவைத்து சதைப்பகுதியை மட்டும் தனியாக எடுக்கவும்.பார்லியை அரைக்கவும்.

*இதனுடன் எண்ணெய் தவிர அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.கலவை தளர்த்தியாக இருந்தால் மேலும் சிறிது பொடித்த ஒட்ஸ் சேர்க்கவும்.

*அவன் டிரேயில் அலுமினியம் பேப்பர் வைத்து 1/4 டீஸ்பூன் எண்ணெய் தடவி மாவை விருப்பமான வடிவங்களில் தட்டி வைக்கவும்.

*அவனை 270 டிகிரிக்கு முற்சூடு செய்து 20 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.இடையில் கட்லட்டை ஒருபக்கம் வெந்ததும் மறுபுறம் திருப்பி விடவும்.

*இந்த கட்லட் மிகவும் நன்றாக இருக்கும்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts