10-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா, இலங்கை, வங்காள தேசம் ஆகிய 3 நாடுகளில் நடைபெற்று வருகிறது. போட்டியின் 13-வது நாளான நாளை 2 ஆட்டங்கள் நடக்கிறது. மொகாலியில் காலை 9.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் “பி” பிரிவில் உள்ள தென் ஆப்பிரிக்கா- நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.
தென்ஆப்பிரிக்கா தொடக்க ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. நெதர்லாந்து அணி முதல் ஆட்டத்தில் இங்கிலாந்திடமும், 2-வது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசிடமும் தோற்றது. பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் ஆகிய 3 துறைகளிலும் சிறந்து விளங்கும் தென்ஆப்பிரிக்கா அணி நெதர்லாந்தை எளிதில் தோற்கடித்து 2-வது வெற்றிகை பெற வாய்ப்பு உள்ளது.
கொழும்பில் பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் “ஏ” பிரிவில் உள்ள பாகிஸ்தான் - கனடா அணிகள் மோதுகின்றன. பாகிஸ்தான் அணி தொடக்க ஆட்டத்தில் கென்யாவையும், 2-வது ஆட்டத்தில் இலங்கையையும் தோற்கடித்தது. கனடா அணி முதல் ஆட்டத்தில் இலங்கையிடமும், 2-வது ஆட்டத்தில் ஜிம்பாப்வேயிடமும் தோற்றது. பலவீனமான கனடா அணியை பாகிஸ்தான் தோற்கடித்து 3-வது வெற்றியை பெற வாய்ப்பு உள்ளது.
பாகிஸ்தான் அணியின் பேட்டிங்கில் மிஸ்பா- உல்-ஹக், யூனுஸ்கான், உமர் அக்மல் ஆகியோரும், பந்து வீச்சில் கேப்டன் அப்ரிடி, சோயிப் அக்தர் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். இ.எஸ்.பி.என், ஸ்டார் கிரிக்கெட், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷன்களில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறும் 15- வது “லீக்” ஆட்டத்தில் “பி” பிரிவில் உள்ள இங்கிலாந்து - அயர்லாந்து அணிகள் மோதுகின்றன.

0 comments :
Post a Comment