background img

புதிய வரவு

பாகிஸ்தான் மந்திரி சுட்டுக்கொலை: மர்ம மனிதன் திடீர் தாக்குதல்

பாகிஸ்தான் சிறுபான்மையின நல மந்திரியாக இருந்தவர் ஷாபாஸ்பாத்தி. இன்று மதியம் அவர் இஸ்லாமாபாத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து அலுவலகத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது வீட்டு அருகே மறைந்து இருந்த மர்ம மனிதன் அவர் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான். இதில் ஷாபாஸ் படுகாயம் அடைந்தார். உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அவர் வழியிலேயே உயிர் இழந்தார். இந்த தாக்குதலில் 2 பேர் காயம் அடைந்தனர். அவரை சுட்டவன் உடனே அங்கிருந்து தப்பி ஓடி விட்டான். அவர் தீவிரவாதியாக இருக்கலாம் என கருதப்படுகிறது. அவனை பிடிக்க இஸ்லாமாபாத் முழுவதும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

ஷாபாஸ் பாகிஸ்தான் மக்கள் கட்சி எம்.பி.யாக இருந்தார். கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்தவர். பாகிஸ்தானில் உள்ள கிறிஸ்தவ தலைவர்களில் முக்கியமானவராகவும் திகழ்ந்தார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts