background img

புதிய வரவு

ஜப்பானில் இருந்து வரும் உணவு பொருட்களில் கதிர்வீச்சு சோதனை; மத்திய அரசு உத்தரவு

ஜப்பானில் சமீபத்தில் நடந்த சுனாமி தாக்குதல் காரணமாக அணு உலைகள் பாதிப்படைந்து கதிர்வீச்சு ஏற்பட்டது.இதனால் உணவு பொருட்களிலும் கதிர்வீச்சு பரவி இருக்கலாம் என கருதப்படுகிறது. எனவே ஜப்பான் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உணவு பொருட்களை கதிர்வீச்சு சோதனைக்கு உட்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக இந்திய அரசு நம் நாட்டுத் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களில் இயங்கி வரும் உணவுப் பொருட்கள் மற்றும் தரக்கட்டுப்பாடு அமைப்புகளுக்கு ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து உணவு பொருட்களிலும் கதிர்வீச்சு அபாயத்தால் பாதிப்படைந்துள்ளதா? என்று கட்டாயமாக பரிசோதனை செய்யும்படி ஆணையிட்டுள்ளது.

இதே போன்ற உத்தரவினை இந்திய அரசு வருவாய்த்துறை அனைத்து சுங்க இலாகாக்களுக்கும் பிறப்பித்து உணவுப் பொருள் மாதிரிகளை எடுத்து சோதனை செய்து பார்க்கும் படி உத்தரவிட்டுள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts