background img

புதிய வரவு

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கிய ஆ.ராசா நண்பர் சாதிக்பாட்சா `திடீர்' தற்கொலை

சென்னை தேனாம் பேட்டை எல்லையம்மன் காலனியில் உள்ள 5-வது குறுக்கு தெருவில் வசித்து வந்தவர் சாதிக்பாட்சா. இவர் கிரீன்ஹவுஸ் புரமோட்டர்ஸ் என்னும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் நிர்வாக இயக்குனராக இருந்தார். ஆ.ராசா குடும்பத்தினர் நடத்தி வந்த இந்த நிறுவனம் பிரமாண்டமான அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டி கொடுத்து வந்தது. 2ஜி ஸ்பெக்ட்ரம் அலை வரிசை ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்தது தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா கைது செய்யப்பட்ட போது அவருக்கு நெருக்கமானவர்களிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அந்த வகையில் ஆ.ராசாவின் நண்பரான சாதிக்பாட்சாவிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில் சாதிக் பாட்சாவின் கிரீன் புரமோட்டர்ஸ் நிறுவனத்தில் ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி பங்குதாரராக இருந்ததாக தகவல்கள் வெளியானது. இது தொடர்பாக சாதிக் பாட்சாவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினார்கள். சாதிக்பாட்சாவை சி.பி.ஐ. அதிகாரிகள் சென்னையில் வைத்து விசாரணை நடத்தியது மட்டு மல்லாமல் டெல்லியில் தலைமை அலுவலகத்துக்கும் வர வழைத்து தீவிர விசாரணை நடத்தினார்கள்.

கடந்த சில வாரங்களில் பல தடவை அவரை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து இருந்தனர். இன்று (புதன்கிழமை) அவரை விசாரணைக்கு வருமாறு சி.பி.ஐ. அதி காரிகள் நோட்டீசு அனுப்பி இருந்தனர். இத்தகைய தொடர் விசாரணையால் அவர் மிகவும் வேதனை அடைந்து இருந்தார். இந்த நிலையில் இன்று மதியம் 1 மணிக்கு தேனாம் பேட்டையில் உள்ள அவரது வீட்டில் அவர் திடீரென தூக்கில் தொங்கினார்.

இதை பார்த்ததும் வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதித்து பார்த்து விட்டு உயிர் பிரிந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் அதிகாரிகள் அவரது வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். சாதிக்பாட்சா தற்கொலை சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts