background img

புதிய வரவு

சென்னையில் களமிறங்கும் காங்.,

ஒரு காலத்தில் தி.மு.க.,வின் கோட்டையாகக் கருதப்பட்ட தலைநகர் சென்னை, தற்போது கலகலத்துவிட்டது. 2006 சட்டசபை தேர்தலில், சென்னை மாவட்டத்தில் 14 தொகுதிகள் இருந்தன. அவற்றில் இரண்டு தொகுதிகளைத் தான் கூட்டணிக்கு கொடுத்தது. 12 தொகுதிகளில் போட்டியிட்ட தி.மு.க., ஏழு தொகுதிகளில் தோல்வியடைந்தது.
இந்த தேர்தலில், சென்னையில் கூடுதலாக உருவாகியுள்ள இரண்டு சேர்த்து, மொத்தமுள்ள 16 தொகுதிகளில் ஐந்து தொகுதிகளை, கூட்டணியான காங்கிரசுக்கு விட்டுக்கொடுத்துள்ளது. தி.நகர் தொகுதியில் செல்லக்குமார், அண்ணாநகரில் திருநாவுக்கரசர், ராயபுரத்தில் மனோ, மயிலாப்பூரில் எஸ்.வி.சேகர் ஆகியோர் போட்டியிடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. வேளச்சேரி தொகுதியும் பா.ம.க.,வுக்கு கொடுக்கப்படும் என தெரியவருகிறது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts