சென்னை : "தி.மு.க., சார்பில் போட்டியிட சீட் கேட்டு தொகுதிக்கு 80 முதல் 90 பேர் வரை விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர்' என்று, முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:இந்த முறை ஒவ்வொரு தொகுதிக்கும் சராசரியாக எவ்வளவு பேர் மனு செய்திருக்கின்றனர் என கேட்கும் போது 80 பேர், 90 பேர் மனு செய்திருக்கின்றனர் என்று பதில் வரும். ஒவ்வொருவராக அழைத்து நேர்காணல் நடத்தினால், அனைவரையும் பார்த்து முடிப்பதற்குள் தேர்தல் நாளே வந்து விடும்.எனவே, தான் முதல் நாள் ஒவ்வொருவரையும் அழைத்துப் பார்த்தபோது, அந்த நாளில் ஏழு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை பார்க்க நிச்சயிக்கப்பட்டிருந்த போதிலும், இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களைக் கூட பார்த்து முடிக்க முடியவில்லை.எனவே தான், இரண்டாவது நாளிலிருந்து ஒவ்வொரு தொகுதிக்கும் மனு செய்தவர்களை இரண்டு மூன்று குழுக்களாகப் பிரித்து நேர்காணலை நடத்தி முடித்தோம். கூட்டணிக் கட்சிகளுடன் பேசி யார், யாருக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது இறுதியாக்கப்பட்டுவிட்ட நிலை.
இன்று அல்லது நாளைக்குள் அந்தப் பட்டியலைக் காணலாம். அனைத்துக் கட்சியினரும் தங்களுக்குள் விட்டுக் கொடுத்து தொகுதிகளை பரிமாறிக் கொண்டிருக்கிறோம். ஒரு சில தொகுதிகளை குறிப்பிட்டு இரண்டு மூன்று கட்சிகள் கேட்டதால், பேசி முடிக்க சில நாட்கள் ஆகிவிட்டன. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதன் காரணமாக, அந்தப் பிரச்னைகள் எல்லாம், ஓரிரு தொகுதிகளைத் தவிர மற்றவையெல்லாம் தீர்க்கப்பட்டு விட்டன. தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியல் வரும் 16ம் தேதி மாலை அறிவிக்கப்படும். வேட்புமனு தாக்கல் 19ம் தேதியன்று துவங்குகிறது. 18ம் தேதி கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடக்கிறது. வரும் 19ம் தேதி தேர்தல் அறிக்கை வெளியிடப்படுகிறது. என் உடல் ஒத்துழைக்கவில்லை என்றாலும் உள்ள உறுதியோடு முடிந்த வரை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவேன்.இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

0 comments :
Post a Comment