background img

புதிய வரவு

கூட்டணி அமளிகளுக்கு மத்தியில் நாளை வேட்பு மனுத் தாக்கல் தொடக்கம்

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது. அதேபோல புதுச்சேரி, கேரளா சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கலும் நாளையே தொடங்குகிறது.

இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக சட்டசபை பொதுத்தேர்தலுக்கான வேட்புமனுக்கள் 19ந் தேதி (நாளை) முதல் 26ந் தேதி வரை தொகுதி தேர்தல் அதிகாரி அலுவலகங்களில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பெற்றுக்கொள்ளப்படும்.

20ந் தேதி ஞாயிற்றுக்கிழமை பொதுவிடுமுறை என்பதால் அன்றைய தினம் வேட்பு மனுக்கள் பெற்றுக்கொள்ளப்பட மாட்டாது. வேட்பு மனு பற்றிய அறிவிப்பினை சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் அதிகாரிகள் 19ந் தேதி (நாளை) வெளியிடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் அட்டவணை:

வேட்பு மனு தாக்கல் தொடக்கம் - மார்ச் 19
வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள் - மார்ச் 26
வேட்பு மனுக்கள் பரிசீலனை - மார்ச் 28
மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் - மார்ச் 30
வாக்குப் பதிவு - ஏப்ரல் 13
வாக்கு எண்ணிக்கை - மே 13

கட்டுப்பாடுகள்:

வேட்பு மனு தாக்கல் மற்றும் பிரசாரம் தொடர்பாக ஏராளமான கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.

அவை பின்வருமாறு:

- வேட்பு மனு தாக்கல் செய்ய ஊர்வலமாக வரக்கூடாது.

- மனு தாக்கல் செய்யும் அறையில் வேட்பாளருடன் 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். சுயேட்சை வேட்பாளர் என்றால் பெயரை முன்மொழிய 10 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

- வேட்பு மனு தாக்கலின்போது வேட்பாளரின் கல்வித்தகுதி, சொத்து விவரம், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த ஆவணங்களையும் இணைக்க வேண்டும்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts