background img

புதிய வரவு

18 ரன்னில் வெஸ்ட் இண்டீஸ் தோல்வி கால் இறுதி வாய்ப்பை தக்கவைத்தது இங்கிலாந்து

சென்னை: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான லீக் ஆட்டத்தில் 18 ரன் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து அணி கால் இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.
சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இங்கிலாந்து முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்களாக ஸ்டிராஸ், பிரியர் களமிறங்கினர். பிரியர் 21 ரன் எடுத்து ரஸ்ஸல் பந்தில் ஸ்டம்புகள் சிதற ஆட்டமிழந்தார். கேப்டன் ஸ்டிராஸ் 31 ரன் எடுத்து ரஸ்ஸல் பந்தில் கிறிஸ் கேலின் அபாரமான கேட்ச்சில் பெவிலியன் திரும்பினார். டிராட் 47 ரன் (38 பந்து,7 பவுண்டரி), மார்கன் 7, போபாரா 4 ரன்னில் வெளியேற இங்கிலாந்து 6 விக்கெட்டுக்கு 151 ரன் எடுத்து திணறியது. ஆல்ரவுண்டர் லூக் ரைட் அதிரடியாக 44 ரன் (57 பந்து, 5 பவுண்டரி) எடுத்து ஆட்டமிழந்தார்.
பிரெஸ்னன் 20 ரன் (2 பவுண்டரி) விளாசினார். இங்கிலாந்து 48.4 ஓவரில் 243 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரஸ்ஸல் 4, தேவேந்திர பிஷூ 3, கெமார் ரோச் 2 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 50 ஓவரில் 244 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. கேல் 43, சம்மி 41, போலார்டு 24 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். வெஸ்ட் இண்டீஸ் 150 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்ததால் ஆட்டம் பரபரப்பாக மாறியது. கடைசி கட்டத்தில் சர்வான் & ரஸ்ஸல் ஜோடி உறுதியுடன் போராடியது.
ரஸ்ஸல் 49 ரன் (46 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்), சர்வான் 31 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். வெஸ்ட் இண்டீஸ் 44.4 ஓவரில் 225 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. 18 ரன் வித்தியாசத்தில் போராடி வென்ற இங்கிலாந்து அணி 7 புள்ளிகளுடன் கால் இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts