background img

புதிய வரவு

பெங்களூரில் நாளை மோதல் அயர்லாந்து சவாலை இந்தியா சமாளிக்குமா?

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி “பி” பிரிவில் இடம் பெற்றுள்ளது. தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து , வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், அயர்லாந்து, நெதர்லாந்து ஆகிய அணிகளும் அந்த பிரிவில் இடம் பெற்று உள்ளன.

இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் வங்காள தேசத்தை 87 ரன்னில் தோற் கடித்தது. இங்கிலாந்துடன் மோதிய 2-வது ஆட்டம் “டை”யில் முடிந்தது. இந்திய அணி 3-வது “லீக்” ஆட்டத்தில் அயர்லாந்தை நாளை (ஞாயிற்றுக்கிழமை) எதிர்கொள்கிறது.

இந்த ஆட்டம் பெங்களூர் சின்னச் சாமி ஸ்டேடியத்தில் பகல்- இரவு போட்டியாக நடக்கிறது. பிற்பகல் 2.30 மணிக்கு ஆட்டம் தொடங்கிறது. 2-வது முறையாக உலக கோப்பையில் விளையாடும் அயர்லாந்து அணியை இந்தியா சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.

அந்த அணியின் சவாலை சமாளிக்க கடுமையாக போராட வேண்டிய நிலையில் இந்திய வீரர்கள் உள்ளன. அயர்லாந்து தொடக்க ஆட்டத்தில் 27 ரன்னில் வங்காளதேசத்திடம் தோற்றது. ஆனால் 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

328 ரன் இலக்கை எடுத்து அயர்லாந்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் இந்திய அணி அயர்லாந்துக்கு எதிராக கவனத்துடன் ஆட வேண்டிய நிலை உள்ளது. இந்திய அணி பேட்டிங்கில் பலம் பெற்று காணப்படுகிறது. தெண்டுல்கர், ஷேவாக், வீராட் கோக்லி, யுவராஜ்சிங், கேப்டன் டோனி ஆகியோர் மிகவும் நல்ல நிலையில் உள்ளனர்.

யூசுப்பதானுக்கு இன்னும் சரியான வாய்ப்பு அமையாததால் அதிரடியை வெளிப்படுத்தவில்லை. ஆனால் இந்திய அணியின் பந்துவீச்சு, பீல்டிங் மிகவும் மோசமாக இருந்தது. இங்கிலாந்துக்கு எதிராக 338 ரன் குவித்தும் வெற்றி பெற முடியாமல் போனதற்கு மோசமான பந்து வீச்சும், பீல்டிங்கும் தான் காரணம். வேகப்பந்து வீச்சில் ஜாகீர்கான் முத்திரை பதித்து வருகிறார்.

நாளை ஆட்டத்தில் அவருக்கு ஓய்வு கொடுக்கலாம் என்று அணி நிர்வாகம் விரும்புகிறது. ஆனால் அயர்லாந்து அணி சிறப்பாக ஆடக்கூடியது என்பதால் அதற்கான வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. பியூஸ் சாவ்லா தொடக்கத்தில் சிறப்பாக வீசினாலும் கடைசி நேரத்தில் சொதப்பிவிட்டார். இதனால் அவர் கழற்றி விடப்படலாம் என்று தெரிகிறது. அவர் இடத்தில் நெக்ரா இடம் பெறுவார்.

அதே நேரத்தில் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு எற்ற நிலையில் இருப்பதால் தமிழக வீரர் அஸ்வினுக்கு வாய்ப்பு உள்ளது. முதன்மை சுழற்பந்து வீரரான ஹர்பஜன்சிங் இதுவரை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இதனால் அவர் தனது திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ஜாகீர்கானுக்கு இணையான வேகப்பந்து வீரர் அணியில் இல்லை. இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர்கள் பல கேட்ச்களை தவறவிட்டனர்.

இதை யெல்லாம் சரி செய்ய வேண்டும். அயர்லாந்து அணியின் நட்சத்திர வீரராக கெவின் ஒபிரையன் உள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் திருப்பு முனையை ஏற்படுத்தியவர் 50 பந்தில் சதம் அடித்து உலக கோப்பையில் சாதனை படைத்தார். இதுதவிர குசாக், கேப்டன் போர்ட்டா பீல்டு, ஜான்மூனி, நீல் ஒபிரையன் போன்ற சிறந்த வீரர்களும் உள்னனர்.

இரு அணிகளும் உலக கோப்பையில் முதல் முறையாக மோதுகின்றன. இந்தப்போட்டி தூர்தர்சன், ஸ்டார் கிரிக்கெட், ஸ்டார்ஸ் போர்ட்ஸ் ஆகிய டெலிவிசன் களில் இந்தப்போட்டி நேரடி யாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts