background img

புதிய வரவு

வானத்தை விலைக்கு வாங்கிய தயாநிதி அழகிரி!

முதல்வர் கருணாநிதியின் பேரனும், மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகனுமான தயாநிதி அழகிரிக்கு சொந்தமான கிளவுட் நைன் மூவிஸ் நடிகர் சிம்புவின் வானம் படத்தை விலைக்கு வாங்கியுள்ளது. டைரக்டர் கிரிஷ் இயக்கத்தில் நடிகர் சிம்பு நாயகனாக நடித்திருக்கும் புதிய படம் வானம். இந்த படத்தின் நாயகியாக அனுஷ்காவும், இன்னொரு நாயகனாக நடிகர் பரத்தும் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி உருவாகியிருக்கும் படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், படத்தை தயாநிதி அழகிரியின் கிளவுட் நைன் மூவிஸ் வாங்கியிருக்கிறது. விரைவில் வானம் இசை வெளியீடு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருக்கிறார் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி.

தயாநிதியின் கிளவுட் நைன் மூவிஸ் தயாரித்து வரும் முக்கிய படமான அஜித்தின் மங்காத்தாவை மே 1ம்தேதி ரீலிஸ் செய்வது என்று ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்ட நிலையில், வானம் படம் அதற்கு முன்னதாகவே ரீலிஸ் செய்யப்படுமா? அல்லது அதற்கு பிறகு ரீலிஸ் செய்யப்படுமா? என்பது தெரியவில்லை.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts