background img

புதிய வரவு

எகிப்து பிரதமர் ராஜினாமா

கெய்ரோ:எகிப்து பிரதமர் அகமது ஷபீக், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக, அந்நாட்டின் ராணுவ உயர்மட்ட கவுன்சில் தெரிவித்துள்ளது.எகிப்தில் ஏற்பட்ட அரசியல் புரட்சியை அடுத்து, நீண்ட காலமாக அந்த நாட்டின் அதிபராக இருந்த முபாரக், கடந்த மாதம் பதவி விலகினார். பதவி விலகுவதற்கு சில நாட்களுக்கு முன், அகமது ஷபீக் என்பவரை பிரதமராக நியமித்தார். தற்போது ராணுவ உயர்மட்டக் கவுன்சிலின் கட்டுப்பாட்டில் எகிப்து அரசாங்கம் நிர்வகிக்கப்படுகிறது.
இந்நிலையில், பிரதமர் ஷபீக்கிற்கு எதிராகவும் போராட்டம் வெடித்தது. ஷபீக், முன்னாள் அதிபர் முபாரக்கின் ஆதரவாளர் என்றும், உடனடியாக அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் குரல் எழுப்பினர்.இதைத் தொடர்ந்து ராணுவ உயர்மட்ட கவுன்சில் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில்,"பிரதமர் பதவியில் இருந்து ஷபீக் ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா ஏற்கப்பட்டு விட்டது. முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எசாம் ஷராப்புக்கு, புதிய அரசு அமைக்கும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது'என, தெரிவிக்கப்பட்டுள்ளது.எசாம் ஷராப், கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன், அமைச்சர் பதவியில் இருந்து விலகினார். அன்று முதல், அதிபர் முபாரக்கிற்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வந்தார். கடந்த மாதம் நடந்த போராட்டத்திலும், அவர் கலந்து கொண்டார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts