background img

புதிய வரவு

தி.மு.க. கூட்டணி ஒருங்கிணைந்து பிரசாரம்

தி.மு.க. கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் 234 தொகுதிகளிலும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என்று ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மத்திய, மாநில அரசுகளின் சாதனைகளை விளக்கித் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவேண்டும் என்று முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டம் முதல்வரும், திமுக தலைவருமான மு. கருணாநிதி தலைமையில் சென்னையிலுள்ள அண்ணா அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.வீ. தங்கபாலு, பா.ம.க. நிறுவனத் தலைவர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், கொங்கு நாடு முன்னேற்றக் கழகத் தலைவர் பெஸ்ட் ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டம் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. அனைத்துத் தொகுதிகளிலும் கூட்டணிக் கட்சியினர் ஒருங்கிணைந்து எவ்வாறு பிரசாரம் செய்வது என்பது குறித்துப் பேசப்பட்டது.
சாதனையை விளக்கிப் பிரசாரம்: கடந்த 5 ஆண்டுகளில் திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள்நலத் திட்டங்கள் ஒவ்வொரு குடும்பத்தையும், தனிமனிதனையும் சென்றடைந்திருக்கின்றன. இதை மக்களிடத்தில் கொண்டுசெல்ல வேண்டும் என்று ஆலோசனை தரப்பட்டது.
இந்தக் கூட்டத்திற்குப் பிறகு நிருபர்களிடம் தலைவர்கள் தெரிவித்த கருத்துகள் விவரம்:
முதல்வர் கருணாநிதி: திருவாரூரில் 23-ந் தேதி நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்பார்கள். பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தமிழகத்துக்குத் தேர்தல் பிரசாரம் செய்ய வருவது தொடர்பாக மனு தாக்கல் முடிந்த பிறகு முடிவு செய்யப்படும்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ.தங்கபாலு: மத்திய மாநில அரசுகளின் சாதனைகளை விளக்கிப் பிரசாரம் செய்யப்படும். கூட்டணிக் கட்சியினர் அனைவரும் ஒருங்கிணைந்து எவ்வாறு பிரசாரம் செய்வது என்பது குறித்து திட்டமிடப்பட்டது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்: 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றிபெறும். குறிப்பாக வடமாவட்டங்களில் உள்ள 120 தொகுதிகளில் 90 சதவீத தொகுதிகளில் உறுதியாக வெற்றி பெறுவோம்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts