background img

புதிய வரவு

நடிகர் கார்த்திக் கட்சி தனித்து போட்டி:நாளை வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சென்னை:""அ.தி.மு.க., கூட்டணியில் நான் சேரவில்லை. எங்கள் கட்சி 41 தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறது.வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடப்படும்,'' என்று அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி தலைவரும், நடிகருகமான கார்த்திக் தெரிவித்தார்.சென்னையில் நேற்று மாலை அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் தலைவர் கார்த்திக் பேசும் போது,""அ.தி.மு.க., கூட்டணியில் நான் சேர்வதில்லை என்று நான் எடுத்த முடிவில் மாற்றம் இல்லை. அவர்கள் 55 தொகுதி கொடுத்தால் கூட நான் அவர்கள் கூட்டணியில் சேரமாட்டேன். எனது கட்சி சென்னையில், மயிலாப்பூர், அண்ணாநகர், தி.நகர் உட்பட தமிழகத்தில் 41 தொகுதிகளில் போட்டியிட வியூகம் அமைத்து வருகிறேன்.
இதில், 30 தொகுதிகளிலாவது வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள்.கட்சியின் மூலம் நேற்றும், இன்றும் நேர்காணல் நடத்தப்பட்டு வருகிறது. இன்று மாலை நேர்காணல் முடிந்ததும், நாளை வேட்பாளர் பட்டியல் வெளியிடுவேன். நானும் தேர்தலில் போட்டியிடுகிறேன். எந்தத் தொகுதி என்று நாளை அறிவிப்பேன். எனது வேட்பாளர்கள் நாளை மறுநாளிலிருந்து வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர். வரும் 22ம்தேதியிலிருந்து நான் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளேன். அம்பாசமுத்திரத்தில் பிரசாரத்தை துவங்குகி‌‌றேன்,'' என்றார்.
முடிவு செய்துள்ள41 தொகுதிகள்:மயிலாப்பூர், அண்ணாநகர், தி.நகர், சங்கரன்கோவில், வாசுதேவ நல்லூர், கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம், திருநெல்வேலி, பாளையங்கோட்டை, சேரன்மாதேவி, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம், திருவாடானை, ராமநாதபுரம், கடலாடி, முதுகுளத்தூர், அருப்புக்கோட்டை, சாத்தூர், விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், ஸ்ரீவைகுண்டம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி, பெரியகுளம், போடிநாயக்கனூர், கம்பம், ஆண்டிபட்டி, பல்லடம், திருப்பூர் (வடக்கு), திருப்பூர் (தெற்கு), திருமங்கலம், உசிலம்பட்டி, திருப்பரங்குன்றம், மதுரை நகர், மதுரை (கிழக்கு), மதுரை (தெற்கு) ஆகிய 41 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts