background img

புதிய வரவு

பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று நிலநடுக்கம்: வீடுகள் இடிந்தன

பிலிப்பைன்ஸ் நாட்டின் தென்பகுதியில் உள்ள அரியாகோ டெல்சூர் மகாணத்தில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள கராஸ்கல் நகரம் உள்ளிட்ட பல இடங்களில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி ஓட்டம் பிடித்தனர்.

சிறிது நேரம் கழித்து வீடுகளுக்கு திரும்பினர். நில நடுக்கம் காரணமாக சில வீடுகள் இடிந்தன. எனவே, பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே 5.7 ரீக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நில நடுக்கம் காரணமாக அரியாகோ நகரில் உள்ள ஒரு தேவாலயத்தின் சுவர் மற்றும் கடல் நீர் நுழையாமல் இருக்க கட்டப்பட்ட தடுப்பு சுவரின் ஒருபகுதியும் இடிந்தன. நெடுஞ்சாலையில் பாதிப்பு ஏற்பட்டது. மற்றபடி பெரிய அளவிலான சேத விவரம் எதுவும் தெரிவிக்கப்பட வில்லை.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts