நல்ல சுவையான பலாச்சுளை கொட்டை நீக்கி பொடிப்பொடியாக நறுப்பி 200 கிராம் எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் ஒரு லீட்டர் தண்ணீர் ஊற்றி அதில் பலாச்சுளை துண்டுகளைப் போட்டு வேக வைக்கவும்.
முற்றின தேங்காயின் மூன்று முடிகளைத் துருவிக் கொள்ளவும் இதில் 200 மி.லி. வெந்நீர் விட்டு கெட்டியாகத் தேங்காய்ப் பால் எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் அதே தேங்காய்த் துருவலில் 200 மி.லி. நீர் விட்டு பால் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
ஒரு முடி தேங்காயை பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வெந்து கொண்டிருக்கும் பலாச்சுளையில் 300 கிராம் நாட்டுச் சர்க்கரையை போட்டு, பலாச்சுளைகளை நன்றாக மசித்துக்கொண்டு 2வது தடவை எடுத்த தேங்காய்ப் பாலைக் கொட்டிக் கொதிக்க விடவும்.
பலாச்சுளைகள் நன்றாக வெந்து பதமானதும் முதலில் பிழிந்த பாலை விட்டுக் கிளறிக் கீழே இறக்கவும்.
பின்னர், பொடிப் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் தேங்காயை நெய்யில் செந்நிறமாக வறுத்து பாயாசத்தில் தூவவும்.
ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து, மிதமான சூட்டில் பாயாசத்தை பரிமாறவும்.

0 comments :
Post a Comment