background img

புதிய வரவு

ஜெகன்மோகன் 28-ந் தேதி மீண்டும் யாத்திரை

ஆந்திர முதல்வராக இருந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தார். இதையறிந்ததும் ஆந்திராவில் 600-க்கும் மேற்பட்டோர் தற்கொலை-அதிர்ச்சியில் இறந்து போனார்கள். அவர்களது குடும்பங்களை நேரில் சந்தித்து ஜெகன் மோகன் ரெட்டி ஆறுதல் கூறி வருகிறார்.

அப்போது நிதி உதவியும் வழங்குகிறார். இதன் மூலம் அவருக்கு செல்வாக்கு பல மடங்கு அதிகரித்துள்ளது. சமீபத்தில் அங்கு நடந்த மேல்-சபை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி கட்சி மொத்தமுள்ள 9 இடங்களில் 3 இடங்களில் வென்றது. இதனால் அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி 28-ந் தேதி மீண்டும் விஜயநகரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். அடுத்த மாதம் 5-ந் தேதி இந்த யாத்திரையை முடிக்கிறார். மொத்தம் 17 குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார். இதற்கான ஏற்பாடுகளை விஜயநகரம் பகுதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts