background img

புதிய வரவு

மியான்மரில் பூகம்பம்; 25 பேர் பலி; கட்டிடங்கள் இடிந்தன

மியான்மர் நாட்டில் வட மேற்கு பகுதியில் தாய்லாந்து எல்லையில் உள்ள தச்சிலியக், தர்பின் மற்றும் ஷான் மாநிலத்தில் நேற்று இரவு 8-29 மணியளவில் பூகம்பம் ஏற்பட்டது. இதனால் அங்கு பூமி குலுங்கியது. எனவே, மக்கள் அச்சம் அடைந்தனர்.

வீடுகளில் இருந்து வெளியேறி ரோடுகளில் தஞ்சம் அடைந்தனர். தச்சிலியக் மாவட்டத்தில் உள்ள தார்வே நகரில் 5 புத்த துறவி மடங்கள், 35 கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாயின.

அதில் தங்கியிருந்த 25 பேர் உயிரி ழந்தனர். அவர்களில் 10 பேர் ஆண்கள், 13 பேர் பெண்கள், ஒரு சிறுவன் அடங்குவர். அவர்கள் தவிர 20 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையே, பூகம்பம் ஏற்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் அடுக்கு மாடி கட்டிங்களில் குடியிருக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அவர்கள் ஆஸ்பத்திரிகள் மற்றும் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த பூகம்பம் தாய்லாந் தின் எல்லைப் பகுதியையும் பாதித்துள்ளது. அங்கு மாசங்க மாவட்டத்திலும் வீடுகள் இடிந்தன. அங்கு ஒரு வீட்டு சுவர் இடிந் ததில் 52 வயதான பெண் உயிரிழந்தார்.

அந்நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள சியாங்ராய் நகரிலும் உணரப்பட்டது. இது தாய்லாந்தின் 2-வது பெரிய சுற்றுலா நகரமாகும். பூகம்பத்தை தொடர்ந்து அங்கு உயரமான கட்டிடங்களில் வாழும் மக்கள் அங்கிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் மாசாய் என்ற இடத்திலும் ஆஸ்பத்திரிகளில் இருந்த நோயாளிகள் சியாங்ராய் நகருக்கு மாற்றப்பட்டுள்ளனர். இத் தகவலை சியாங் ராய் ராய் கவர்னர் சொம்காய் ஹடாய டான்டி தெரிவித்தார். மியான்மரில் ஏற்பட்ட பூகம்பம் சீனா, வியட்னாம் ஆகிய நாடுகளில் உணரப்பட்டது.

ஆனால் அங்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. இந்த பூகம்பம் மியான்மர் எல்லையில் தாய்லாந்தில் உள்ள லாவோஸ் என்ற இடத்தை மையமாக கொண்டு பூமிக்கு அடியில் 10 மீட்டர் ஆழத்தில் தாக்கியதாக அமெ ரிக்க வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 6.8 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டதாக அறிவித்துள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts