background img

புதிய வரவு

காட்டு மாரியம்மன் கோவில்

ஸ்தல வரலாறு::

விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக் கோட்டையை அடுத்த அண்ணமங்கலத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது காட்டு மாரியம்மன் கோவில் இந்த கோவிலை ஈர ஆடையுடன் வலம் வந்து மஞ்சள் கட்டிய கயிற்றை அம்மனிடம் வைத்து பூஜை செய்து அதனை அங்குள்ள வேப்ப மரத்தில் கட்டினால்,அவ்வாறு செய்த எட்டாவது நாளிலேயே திருமணத் தடை நீங்கி விடும் என்கிறார்கள்.

அதே வேப்ப மரத்தில் குழந்தை பாக்கியம் தாமதமாகும் பெண்கள் தொட்டில் கட்டி வழிபட்டால் அந்த பாக்கியம் வெகு விரைவில் அமையும் என்பதும் நம்பிக்கை.

இது தவிர படிப்பில் சிறந்து விளங்க ஆசைப்படும் மாணவ மாணவியர் காட்டு மாரியம்மன் துணை என்று 108 முறை துண்டுச் சீட்டுகளில் எழுதி அதை மாலையாக கட்டி இந்த வேப்ப மரத்திலோ அல்லது சூலத்திலோ அணிவித்து வழிப்படுவதையும் காண முடிகிறது இங்குள்ள நாகதேவியை வணங்கினால் நாகதோஷமும் நீங்குகிறது. செய்வினை அகலவும் இங்கு பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள். ஆடி மாதம் வரும் வெள்ளிக் கிழமைகள் இங்கு மிகவும் விஷேசம்.
போக்குவரத்து வசதி::

இந்த கோவிலுக்கு செல்ல பஸ் மற்றும் ரெயில் வசதி உள்ளது.சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து விழுப்புரம் சென்று பின் அங்கிருந்து உள்ளூர் பேருந்து மூலம் செஞ்சிக் கோட்டையை வழியாக அண்ணமங்கலத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இந்த கோவில் அமைந்துள்ளது.

கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து பேருந்து மூலம் செஞ்சிக் கோட்டை சென்று பின் அங்கிருந்து உள்ளூர் பேருந்து மூலம் அண்ணமங்கலம் வழியாக ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இந்த கோவிலுக்கு செல்லலாம்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts